Connect with us
mgr_main_cine

Cinema News

தியேட்டரில் மின்சாரத்தை துண்டித்து சதி….படத்தை காப்பாற்றும் முயற்சியில் மீண்டாரா எம்.ஜி.ஆர்…?

மக்கள் கலைஞர், புரட்சி கலைஞர் எம்.ஜி.ஆர்- இவரது சினிமா வாழ்க்கையிலும் சரி அரசியல் வாழ்கையிலும் சரி ஒரு திருப்பு முனையை ஏற்படுத்திய படமாக அமைந்தது உலகம் சுற்றும் வாலிபன். இந்த படம் முடிக்கப்பட்டு ரிலீஸ்க்காக காத்திருக்கும் நிலையில் எம்.ஜி.ஆர் ஏகப்பட்ட இடையூறுகளுக்கு ஆளானார்.

mgr1_cine

படவேலைகள் எல்லாம் முடிந்து போஸ்ட் புரெடக்‌ஷனுக்கு தயாராகும் பணியில் போஸ்டர்களை ஒட்டுவதற்கு அதிக வரிக்கட்டணத்தை விதித்தது சென்னை மாநகராட்சி. அதற்கு மேல் போஸ்டர்களை ஒட்டினாலும் அதை கிழிப்பதற்கு நிறைய பேர் வெளியில் காத்திருந்தனர். ஆகவே போஸ்டர்களே ஒட்டாமல் படத்தை ரிலீஸ் செய்ய முடிவு எடுத்தார் எம்.ஜி.ஆர்.

இதையும் படிங்கள் : சூப்பர் குட் பிலிம்ஸின் 100வது படம்…! விஜயுடன் சேர்ந்து நடிக்க போகும் அந்த பிரபலம்…! வெளியான அதிகாரப்பூர்வ தகவல்..

mgr2_cine

மேலும் படம் வெளியிடுவதற்கு முன் படத்தை அண்ணாதிராவிட முன்னேற்றக்கழகத்திற்கு நெருக்கமானவர்களுக்கும் படக்குழுவினருக்கும் போட்டு காட்ட தேவி பாரடைஸ் தியேட்டரில் ஏற்பாடு செய்திருந்தார் எம்.ஜி.ஆர். ஆனால் சிலபேரின் சதி வேலையால் அன்று முழுவதும் மின்சாரத்தை துண்டித்து நாச வேலையில் ஈடுபட்டது சில அமைப்பு.

mgr3_cine

இதையும் படிங்கள் : த்ரிஷாவை காதலிக்கவும் முடியும்.. தந்தையாக ஜொலிக்கவும் முடியும்.. வெரைட்டி நடிப்பில் பின்னி பெடலெடுத்த பிரகாஷ் ராஜ்..

மேலும் படப்பிடிப்பு சமயத்திலும் மின்சாரத்தை துண்டித்ததால் ஜெனரேட்டர்களை வைத்து எடுத்தனர். எல்லா பிரச்சினைகளையும் தாண்டி 1973ஆம் ஆண்டு மே 7 ஆம் தேதியில் இருந்து டிக்கெட் 30 நாள்களுக்கு விற்று தீர்ந்தது. மே 11 ஆம் தேதி திரைக்கு வந்தது உலகம் சுற்றும் வாலிபன். அந்த படத்தின் நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் என்ற சீர்காழியின் குரலில் வந்த பாடல் தியேட்டர் முழுவதும் வெற்றி வெற்றி என கூச்சலிட்டது. ஒரு பக்கம் இந்த படம் வசூலில் சாதனை படைக்க திராவிட கழகத்தில் இருந்து பிரிந்து அண்ணா திராவிடமாக தனியே இடைத்தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் வேட்பாளரை நிறுத்தி வெற்றி கண்டார். ஒரே நேரத்தில் அந்த படத்தின் இமாலய வெற்றி திண்டுக்கல் தொகுதியில் வெற்றி என அரசியலில் புது பிரவேசம் எடுத்தார் நமது எம்.ஜி.ஆர்.

 

google news
Continue Reading

More in Cinema News

To Top