கமலை வைத்து எம்ஜிஆர் தீட்டிய திட்டம்!.. கடைசி வரை நடக்காமலே போயிடுச்சே!...
எம்ஜிஆர் - சிவாஜி ஆகியோரின் குருகுலத்தில் இருந்து வந்தவர் தான் கமல். களத்தூர் கண்ணம்மாவிற்கு பிறகு சிவாஜியுடன் ஒரு படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதன் பிறகு எம்ஜிஆர் படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். எம்ஜிஆர்-சிவாஜி இருவரும் தூக்கி வளர்த்த குழந்தைதான் கமல்.
ஒரு கட்டத்தில் சிவாஜியே கமலை இவர் தான் என்னோட அடுத்த வாரிசு என்றும் திரைப்பயணத்தை கமலிடம் விட்டுச் செல்கின்றேன் என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு சினிமாவில் ஒரு பெரிய ஆளுமையாக தற்போது வலம் வருகிறார் கமல். சினிமாவை பற்றி தெரியாதது என ஒன்றுமே இல்லை.
அத்தனை நுணுக்கங்களையும் கற்றறிந்தவராக கமல் இருக்கிறார். சிவாஜியை போல எம்ஜிஆரின் நன்மதிப்பை பெற்றவர் கமல். கமல் சம்பந்தப்பட்ட அத்தனை விழாக்களிலும் கலந்து கொண்டு எம்ஜிஆர் பெருமை சேர்த்திருக்கிறார்.
மேலும் கடந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய சாதனை பெற்ற படம் பொன்னியின் செல்வன். அந்தப் படத்தில் ஆரம்பத்தில் நடிக்க வேண்டும் என விரும்பியவர் எம்ஜிஆர் என ஊரறிந்த விஷயம். அது முடியாது என்று தெரிந்தவுடன் கமலை வைத்து எடுக்க திட்டமிட்டாராம் எம்ஜிஆர்.
எம்ஜிஆரின் சொந்தப் புரடக்ஷனிலேயே கமலை வந்தியத்தேவனாக வைத்தும் நடிகை ஸ்ரீதேவியை குந்தவையாகவும் நடிக்க வைக்க நினைத்தாராம். ஆனாலும் அந்த திட்டமும் நடக்கவில்லை. இப்படி கமல் மீது அலாதி அன்பு கொண்டவராகவே இருந்திருக்கிறார் எம்ஜிஆர்.
இதையும் படிங்க : காலம்போன காலத்துல காவாலா கேட்குதா!.. தமன்னா ஸ்டெப்பை போட்ட ரம்யா கிருஷ்ணன்.. வீடியோ பாருங்க!…
பொன்னியின் செல்வன் எம்ஜிஆர், கமல், சிவாஜி, என மாறி இப்போது மணிரத்தினம் கையில் பொக்கிஷமாக மாறியிருக்கிறது. இந்த சுவாரஸ்ய செய்தியை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் கூறினார்.