எம்.ஜி.ஆர் எடுக்க நினைத்த ‘இணைந்த கைகள்’!… பல வகைகளிலும் வந்த தடை!.. நடந்தது இதுதான்!..

Published on: February 21, 2024
mgr
---Advertisement---

inaintha kaigal : 1950 முதல் 1970 வரை தமிழ் திரையுலகில் பெரிய ஆளுமையாக கோலோச்சியவர்தான் எம்.ஜி.ராமச்சந்திரன். திரையுலகில் இவரை எல்லோரும் சின்னவர் என அழைப்பார்கள். ரசிகர்கள் அவரை வாத்தியார் என அழைப்பார்கள். சிறு வயது முதலே நாடகங்களில் நடிக்க துவங்கி பின்னாளில் சினிமாவில் நுழைந்தவர் இவர்.

சினிமாவில் நுழைந்தாலும் இவருக்கு ஹீரோ வாய்ப்பு கிடைக்கவில்லை. 10 வருடங்கள் மற்ற நடிகர்கள் ஹீரோவாக நடிக்கும் திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார். 47 வயதில்தான் ராஜகுமாரி படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

இதையும் படிங்க: மகளின் திருமணத்திற்காக எல்லோரிடமும் கையேந்திய இயக்குனர்!.. எம்.ஜி.ஆர் கொடுத்த இன்ப அதிர்ச்சி..

அதன்பின் நாடோடி மன்னன் உள்ளிட்ட சில படங்கள் மூலம் சினிமாவில் முன்னணி நடிகராக மாறினார். ஒருகட்டத்தில் அசைக்க முடியாத நடிகராக மாறினார். ஆக்‌ஷன் ரூட்டில் பயணித்த எம்.ஜி.ஆர் தனது படங்களில் நல்ல கருத்துக்கள் மற்றும் அறிவுரைகளை சொல்வது போலவே நடித்தார். இதனால்தான் ரசிகர்கள் அவரை வாத்தியார் என அழைத்தார்கள்.

iinaintha kaigal

திரையுலகில் எல்லாவற்றையும் செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றிருந்த எம்.ஜி.ஆருக்கும் சில விஷயங்கள் கை கூடாமல் போயிருக்கிறது. 1969ம் வருடம் இணைந்த கைகள் எனும் படத்தை துவங்கினார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் சார்பில் அவரே தயாரித்து இயக்கி நடிப்பதாக முடிவு செய்யப்பட்டது. இது ஒரு பாரசீக கொள்ளையன் பற்றிய கதை.

இதையும் படிங்க: சிவாஜியுடன் சேர்ந்து நடிக்க மாட்டேன்!.. எம்.ஜி.ஆர் சொன்ன காரணத்தை பாருங்க!…

இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகளை ஈரான் நாட்டில் எடுக்க திட்டமிட்டார். மேலும், இப்படத்திற்காக ஒரு ஈரானிய நடிகையையும் ஒப்பந்தம் செய்தார். ஆனால், இந்த படத்தின் தொடக்கவிழா சத்யா ஸ்டுடியோவில் நடந்தது. கலைஞர் கருணாநிதி இதற்கு தலைமை தாங்கினார். ஆனால், இப்படத்தின் படப்பிடிப்பு 2 நாட்கள் மட்டுமே நடந்தது.

inaintha

எம்.ஜி.ஆர் எவ்வளவு முயற்சி செய்தும் ஈரான் அரசாங்கம் இந்த கதைக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, ஈரான் நாட்டில் படப்பிடிப்பு நடத்தவும் எம்.ஜி.ஆருக்கு அனுமதி தரவில்லை. ஒருகட்டத்தில் இந்த படத்தை கைவிட்ட எம்.ஜி.ஆர் சில மாதங்கள் கழித்து உலகம் சுற்றும் வாலிபன் படத்தை துவங்கினார். மேலும், இணைந்த கைகள் படத்திற்காக ஒலிப்பதிவு செய்யப்பட்ட 4 பாடல்களை பின்னாளில் தனது வேறு படங்களில் எம்.ஜி.ஆர் பயன்படுத்தினார்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.