என்ன சொன்னா கேட்கமாட்டீயா நீ?.. டி.ராஜேந்திரை மிரட்டிய எம்ஜிஆர்.. கலைஞரிடம் தஞ்சம் புகுந்த தாடிமாமா...

தமிழ் சினிமாவில் ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் அந்த காலத்தில் ஒரு நாட்டாமையாக இருந்து பிரச்சினைக்கு தீர்வு கண்டவர் என்.எஸ்.கிருஷ்ணன். என்ன பிரச்சினைனாலும் இவரை தான் அணுகுவார்களாம். அந்த அளவுக்கு சினிமாவிலும் சரி நடிகர்கள் மத்தியிலும் சரி என்.எஸ்.கிருஷ்ணன் மீது மிகுந்த மரியாதையே இருந்தது.

அவருக்கு அடுத்தப்படியாக அந்த அளவுக்கு மரியாதையாக நடத்தப்பட்ட நடிகர்களில் எம்ஜிஆரும் ஒருத்தர். அவர் ஒரு இடத்தை அடைந்ததும் எம்ஜிஆரிடம் தான் அணுகி பிரச்சினைக்கு தீர்வு காண்பார்களாம். அந்த வகையில் மாட்டிக் கொண்டவர்தான் நடிகர் டி.ஆர்.ராஜேந்தர்.

mgr1

mgr1 tr

டி.ராஜேந்தர் உறவு காத்த கிளி படத்தில் நடித்துக் கொண்டிருந்த நேரம். அந்த படத்தின் தயாரிப்பாளர் ரத்தினம். டி. ராஜேந்திருக்கும் ரத்தினத்தினத்திற்கு ஏதோ ஒரு பிரச்சினையாம். ரத்தினத்திற்கு ஃபைனான்ஸ் செய்தது அப்போது இருந்த ஒரு எம். எல். ஏ. வாம். இந்த பிரச்சினையை அந்த எம்.எல்.ஏ எம்ஜிஆர் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்.

இதையும் படிங்க : சிக்ஸ் அடிக்குற மாதிரி போய் இப்படி டொக் வச்சிட்டாரே விஜய்… “வாரிசு” விமர்சனம் இதோ…

உடனே எம்ஜிஆர் சமரசம் செய்யத்தான் டி.ராஜேந்திரை அழைத்திருக்கிறார். ஆனால் டி.ஆர் எம்ஜிஆரிடமே அவர் பாணியில் கத்தினாராம். உடனெ எம்ஜிஆர் பேசாமல் அவர் சொல்கிற மாதிரி பாடல்களை எடுத்து முடி, இல்லையென்றால் அவ்ளோதான் என்று எம்ஜிஆர் சொல்ல அந்த எம்.எல்.ஏவும் அவரது பாணியில் மிரட்டியிருக்கிறார்.

mgr2

tr

இதை அறிந்த தயாரிப்பாளரும் நடிகருமான ஏ.எல்.அழகப்பன் டி.ஆரை அழைத்துக் கொண்டு கலைஞரிடம் நடந்ததை சொல்லியிருக்கிறார். கலைஞரும் இவர் நம் பிரச்சாரத்திற்கு சரியான ஆளு என்று கருதி இணைத்துக் கொண்டாராம். மறு நாளே தந்தியில் திமுகவில் இணைந்தார் டி.ஆர் என்று செய்திகள் வெளியாகியிருக்கிறது.

அதன் பிறகு எம்ஜிஆர் அந்த பிரச்சினையை கையில் எடுக்கவில்லையாம். மீறினால் அது வேற மாதிரி முடிந்து விடும் எனக் கருதி அப்படியே விட்டு விட்டாராம். இந்த சுவாரஸ்ய தகவலை ஏ.எல்.அழகப்பன் ஒரு பேட்டியில் கூறினார்.

Rohini
Rohini  
Related Articles
Next Story
Share it