நடிகையுடன் திருமணமா?!.. வார்னிங் கொடுத்த எம்.ஜி.ஆர்!. உடனே செய்து முடித்த ஜெய்சங்கர்!...

by amutha raja |   ( Updated:2023-11-11 05:19:18  )
jaishankar and mgr
X

Actor Jaishankar: ஜெய்சங்கர் தமிழ் சினிமாவின் பழங்கால நடிகர்களில் ஒருவர். இவர் தமிழில் இரவும் பகலும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பல்வேறு குணசித்திர வேடங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார்.

இவர் மேலும் உயிர் மேல் ஆசை, முத்துசிப்பி, கன்னி பெண் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சிவாஜி கணேசன், முத்துராமன் போன்ற பல நட்சத்திரங்களுடன் நடித்திருந்தாலும் எம்ஜிஆருடன் இணைந்து ஒரு படம் கூட நடித்ததில்லை என்றுதான் கூற வேண்டும்.

இதையும் வாசிங்க:வாக்கிங்கில் ரசிகர்களுக்கு ரஜினி கொடுத்த ஷாக் ட்ரீட்மெண்ட்! இவ்ளோ விஷயம் நடந்துருக்கா!…

ஆனால் இவருக்கு எம்ஜிஆருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் ஜெய்சங்கர் அதை பயன்படுத்தி கொள்ள முடியாத நிலையில் இருந்துள்ளாராம். மேலும் இவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் எம்ஜிஆருக்கு மிகவும் நெருக்கமானவர்.

எம்ஜிஆர் ஒரு முறை இவரிடம் தன்னை சந்திக்குமாறு அழைப்பு விட்டாராம். ஜெய்சங்கரும் எம்ஜிஆரை காண அவர் மேக்கப் அறைக்கு சென்றாராம். எம்ஜிஆர் தான் கொண்டு வந்த உணவை ஜெய்சங்கருடன் பகிர்ந்து சாப்பிட்டாராம். பின் சாப்பிட்டு முடித்ததும் அறையில் இருந்த அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டாராம். அந்த காலத்தில் ஜெய்சங்கரையும் அவருடன் நடித்த விஜயலட்சுமியையும் இணைத்து பல பத்திரிக்கைகளில் கிசுகிசு வந்தது.

இதையும் வாசிங்க:ஒரு பாட்டுக்கு 20 நாட்கள் அலையவிட்ட கண்ணதாசன்… கடுப்பான பி.எஸ்.வீரப்பா.. கடைசியில் செம ட்விஸ்ட்டு..!

பின் ஜெய்சங்கரிடம் நீங்கள் ‘விஜயலட்சுமியை கல்யாணம் செய்ய போறீங்களா?’.. என கேட்டாராம். உடனே ஜெய்சங்கர் ‘இல்லை… நீங்கள் என்னை தவறாக புரிந்து விட்டீர்கள்… நானும் எம்.விஜயலட்சுமியும் பல திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளோம்… அதனை பத்திரிக்கையாளர்கள் தவறாக புரிந்து கொண்டு எங்கள் இருவரையும் இணைத்து தவறாக எழுதுகிறார்கள்.. நாங்க இருவரும் சிறந்த நண்பர்கள்தான்’ என கூறினாராம்.

மேலும் ‘என்னை பொறுத்தவரை என் பெற்றோர் சொல்லும் பெண்ணைதான் திருமணம் செய்து கொள்வேன்’ எனவும் கூறினாராம். உடனே எம்ஜிஆர் ‘திருமணம் என்பது உங்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க கூடியது.. நீங்கள் விஜயலட்சுமியை திருமணம் செய்து கொண்டலும் தவறில்லை… ஆனால் உங்களுக்கு எது சரியோ அதையே செய்யுங்க.. ஆனால் இந்த செய்திக்கு முற்றுபுள்ளி வைங்க’.. என கேட்டு கொண்டாராம். உடனே ஜெய்ஷங்கர் தனது பெற்றொர் சொன்ன பெண்ணையே திருமணம் செய்து கொண்டாராம்.

இதையும் வாசிங்க:மரணத்தை எதிர்பார்த்து கொண்டிருந்த நாகேஷ்… ரகசியத்தை உடைக்கும் பிரபல நடிகை…

Next Story