Connect with us
MGR and SIvaji

Cinema History

எம்.ஜி.ஆர் சலிக்க சலிக்க பார்த்த சிவாஜி படம் அதுதான்!.. அவ்வளவு தீவிர ரசிகரா?!..

எம்.ஜி.ரும், சிவாஜியும் போட்டி நடிகர்கள். இவருக்கு அவரை பிடிக்காது. அவருக்கு இவரை பிடிக்காது. சிவாஜியின் ரசிகர்களுக்கு எம்.ஜி.ஆரை பிடிக்காது.. எம்.ஜி.ஆரின் ரசிகர்களுக்கு சிவாஜியை பிடிக்காது என்றுதாம் பொதுவாக நினைப்பார்கள். ஆனால், அதில் உண்மையில்லை.

எம்.ஜி.ஆரும் சிவாஜியும் நல்ல நட்பில் இருந்த நடிகர்கள்தான் என்பது அவர்களுடன் நெருங்கிய பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும். எந்த இடத்திலும் சிவாஜியை விட்டுக்கொடுக்க மாட்டார் எம்.ஜி.ஆர். அதேபோல்தான் சிவாஜியும். இன்னும் சொல்லப்போனால் சிறுவயது முதலே இருவரும் அண்ணன் – தம்பியாக பழகியவர்கள்.

இதையும் படிங்க: சிவாஜியுடன் நேரடியாக மோதிய 24 ரஜினி படங்கள்… ஜெயித்தது யாருன்னு தெரியுமா?

இருவருமே பல வருடங்கள் நாடகங்களில் நடித்துவிட்டு சினிமாவுக்கு வந்தவர்கள். சிறுவயதில் எம்.ஜி.ஆரின் வீட்டில்தான் சிவாஜி சாப்பிடுவார். அவருக்காக எம்.ஜி.ஆரும் காத்திருப்பார். சிவாஜியை ‘தம்பி கணேசா’ என பாசமாக அழைப்பார் எம்.ஜி.ஆர். சிவாஜி வறுமையில் இருக்கும்போது தன்னிடம் இருக்கும் பணத்தில் உணவு வாங்கி கொடுப்பார் எம்.ஜி.ஆர். இதை சிவாஜியே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

அதேபோல், சிவாஜியின் அம்மாவின் கையில் பல நாட்கள் எம்.ஜி.ஆர் சாப்பிட்டிருக்கிறார். சிவாஜிக்கு திருமணம் நிச்சயமானபோது முதல் ஆளாக போய் திருமண வேலைகளை பார்த்தவர் எம்.ஜி.ஆர்தான். சிவாஜியே சிறந்த நடிகர் என பல இடங்களில் எம்.ஜி.ஆர் பேசியிருக்கிறார். தன்னிடம் ஆக்‌ஷன் கதை வந்தால் ‘அண்ணன் எம்.ஜி.ஆருக்கு இது பொருத்தமாக இருக்கும்’ என சொல்லி அனுப்புவார் சிவாஜி.

இதையும் படிங்க: சிவாஜி ஆண்டி ஹீரோவாக நடித்த முதல் படம்..! 17 நாளில் ஷூட்டிங்கை முடித்த பிரபல இயக்குனர்..!

சிவாஜி நடித்த தில்லானா மோகனாம்பாள் படத்தை பலமுறை பார்த்திருக்கிறார் எம்.ஜி.ஆர். அதேபோல், அவர் முதல்வராக இருந்தபோது வெளிநாட்டினர் வந்தபோது தமிழ் கலை தொடர்புள்ள ஒரு திரைப்படத்தை பார்க்க ஆசைப்பட்டபோது ‘தில்லானா மோகானாம்பாள்’ படத்தைத்தான் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு போட்டு காட்டினார்.

அதேபோல், சிவாஜி படத்தில் இடம் பெற்ற பல பாடல்கள் எம்.ஜி.ஆரின் ஃபேவரைட்டாக இருந்தது. ‘மாதவி பொன்மயிலாள் தோகை விரித்தாள்’ பாடலில் சிவாஜி ஒரு நடை நடந்து வருவார். சிவாஜியை சந்திக்கும்போதெல்லாம் அப்படி நடந்து காட்டி என ரசிப்பாராம் எம்.ஜி.ஆர்.

இதையும் படிங்க: சிவாஜிக்கு மட்டும் தரீங்க… எனக்கும் வேணும்.. எம்.ஜி.ஆரிடம் அடம் பிடித்து வாங்கிய நம்பியார்..!

google news
Continue Reading

More in Cinema History

To Top