Connect with us
mgr

Cinema History

எம்ஜிஆருக்கு மிகவும் ஸ்பெஷலான நாள் எது தெரியுமா? அட மனைவி மேல இம்புட்டு பாசத்தை வச்சிருந்திருக்காரே?

MGR ; தமிழ் திரையுலகில் ஏன் இந்திய சினிமாவிலேயே ஒரு மாபெரும் இமயமாக இருந்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். இவரை பொன்மனச் செம்மல், மக்கள் திலகம், சின்னவர் என பல அடைமொழிகள் கொடுத்து மக்கள் அழைத்து வந்தார்கள்.

மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்குள்ள நடிகராகவும் எம்ஜிஆர் இருந்தார். சினிமாவில் மட்டுமில்லாமல் பொது வாழ்விலும் ஈடுபட்டு மக்களுக்கு தேவையானதை சிறப்பாக செய்து  கொடுத்தார். அரசியலுக்குள் வருவதற்கு முன்னரே பல உதவிகளை செய்தார் எம்ஜிஆர்.

இதையும் படிங்க: நடிப்பை பார்த்து வாலி அடித்த கமெண்ட்!.. எம்.ஜி.ஆருக்கு வந்த கோபம்!.. அடுத்து நடந்ததுதான் ஹைலைட்!..

அவருடைய ஒரே எண்ணம் மக்கள் , மக்கள் என்பதாகத்தான் இருந்தது. அதனால்தான் எம்ஜிஆரை இன்றுவரை ஒரு தெய்வமாக நினைத்து வணங்கிவருகிறோம். இப்ப இருக்கும் ரஜினி, கமல், விஜய், அஜித் ரசிகர்கள் எல்லாம் எம்ஜிஆர் ரசிகர்கள் முன்பு வெறும் தூசுதான்.

அந்தக் காலத்தில் இருந்து இப்போது வரை சில எம்ஜிஆர் ரசிகர்கள் இருப்பார்கள். அவர்களிடம் எந்தவொரு வன்மமும் இருக்காது. கடுமையாக பேசுவது, கடிந்து கொள்வது என எந்தவொரு அநாகரீகமான செயலை பார்க்க முடியாது.

இதையும் படிங்க: பிபி6 வெற்றியாளரை மறைமுகமாக விமர்சித்த கமல்ஹாசன்..! நெத்தியடியாக அடித்த அசீம்..! எங்க திரும்புனாலும் அடி..!

ஆனால் இன்றைய ரசிகர்கள் எந்த நடிகரை கீழே போட்டு  மிதிக்கலாம்? யாரை விரட்டலாம் என்ற நோக்கத்திலேயே இருக்கிறார்கள். இந்த நிலையில் எம்ஜிஆர் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமயத்தில் உங்களுக்கு மறக்க முடியாத நாள் எது என கேட்டாராம்.

அதற்கு எம்ஜிஆர் எனக்கு மறக்கமுடியாத நாள் புதன் கிழமை. அந்த  நாளில் தான் என் முதல் மனைவியை திருமணம் செய்து கொண்டேன். சென்னையில் இருந்து அவரை சொந்த ஊருக்கு அனுப்பி வச்சதும் புதன் கிழமைதான். என்னையும் இந்த உலகத்தையும் விட்டு அவர் பிரிந்து சென்றதும் புதன் கிழமைதான் என கூறியிருக்கிறார் எம்ஜிஆர்.

இதையும் படிங்க: சிவாஜி படத்தில் அதகளம் செய்த ரஜினி!.. நடிகர் திலகம் செய்த சிறப்பான சம்பவம்!..

google news
Continue Reading

More in Cinema History

To Top