மணிரத்னம் படத்துக்கு 'நோ' சொன்ன மோகன்... விஷயம் இப்ப தானே வெளிய தெரியுது..!

by sankaran v |   ( Updated:2024-08-17 21:01:07  )
Manirathnam, mohan
X

Manirathnam, mohan

மணிரத்னம் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தா யாராவது 'நோ' சொல்வாங்களா? கரும்பு தின்னக் கூலியான்னு உடனே சம்மதிச்சிருவாங்க. ஆனா நம்ம மைக் மோகன் அப்பவே கெத்தா 'நோ' சொல்லிருக்காரு. ஏன்னு பார்ப்போமா...

விஜய் நடிக்கும் 'கோட்' படத்தில் மிரட்டும் வில்லனாக வருகிறார் மைக் மோகன். டிரெய்லரில் அவரைப் பார்த்ததும் இப்படி ஒரு மிரட்டலான நடிப்பா என்று ரசிகர்கள் அவரது நடிப்பைப் பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளனர்.

1980ல் மூடுபனி படத்தின் மூலம் தமிழ்த்திரை உலகிற்கு வந்தார் மோகன். கர்நாடகாவில் பிறந்தாலும் தமிழ் தவிர கன்னடம் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் மோகன் நடித்துள்ளார்.

2000த்துக்குப் பிறகு பெரிய அளவில் அவர் நடிக்காமல் விட்டு விட்டார். தற்போது விட்ட இடத்தைப் பிடிப்பதற்காக மீண்டும் தமிழ்சினிமாவில் நுழைந்துள்ளார்.

Anjali

Anjali

இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் மணிரத்னத்துக்கும் தனக்கும் இடையே நடந்த ஒரு சுவாரசியமான சம்பவம் குறித்துப் பேசியுள்ளார். மணிரத்னம் கன்னடப்படங்களின் மூலம் இயக்குனராக அறிமுகானார். தமிழில் 1985ல் முரளி நடித்த பகல்நிலவு படத்தை இயக்கி அறிமுகமானார்.

தமிழில் அவருக்கு ஆரம்ப காலத்தில் இதயகோவில், மௌனராகம் படங்கள் தான் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தன. இந்த இரண்டு படங்களிலுமே நான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளேன். இது ஒருபுறம் இருக்க 1990ல் ரகுவரன், ரேவதி நடிப்பில் வெளியான அஞ்சலி படத்தை மணிரத்னம் இயக்கினார்.

இந்தப் படத்தில் ரகுவரன் கேரக்டரில் முதலில் மோகனிடம் தான் நடிக்கக் கேட்டுள்ளார் மணிரத்னம். ஆனால் அவரோ மறுத்து விட்டார். இதற்கு என்ன காரணம் என்று இப்போது தான் அவர் வாய் திறந்துள்ளார்.

அஞ்சலி திரைப்படம் மன வளர்ச்சி குன்றிய ஒரு சிறு குழந்தையைப் பற்றிய கதை. அந்தப் படத்தில் எல்லா விஷயங்களும் ரசிகர்களைக் கவரும் வகையில் தத்ரூபமாக எடுக்கப்பட்டது. ஆனால் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தையை தாய், தந்தை தனி அறையில் வளர்க்கும் காட்சிகள் படத்தில் இடம்பெற்றிருந்தன. அந்த ஒரு விஷயத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. அதனால் அந்தப் படத்தில் நடிக்க மறுத்து விட்டேன். இவ்வாறு மோகன் தெரிவித்துள்ளார்.

Next Story