மோகனுக்காக டி.ராஜேந்தர் இசை அமைத்த படம் இதுதான்...மாஸான பாடல்களுடன் களமிறங்கியது

by sankaran v |
மோகனுக்காக டி.ராஜேந்தர் இசை அமைத்த படம் இதுதான்...மாஸான பாடல்களுடன் களமிறங்கியது
X

mohan

1980ல் மோகன் நடித்த சூப்பர்ஹிட்ஸ் படங்கள்

- ஒரு பார்வை

மைக் மோகன் என்றால் தெரியாத ரசிகர்கள் யாரும் இருக்க முடியாது. பாடல் நிஜத்தில் இவர் பாடுவதைப் போன்றே இருக்கும். அவ்வளவு இனிமையான பாடல்கள் இவர் நடித்த அனைத்துப் படங்களிலும் அமைந்திருந்தன. இன்றும் மோகன் ஹிட்ஸ்சை இரவு நேரங்களில் கேட்கும் ரசிகர்கள் பலர் உண்டு.

இரவுப் பொழுதை இனிமையாக்கும் அந்தப் பாடல்கள். 80ஸ் ரசிகர்களில் மோகனின் பாடல்களை அனைத்துத் தரப்பு ரசிகர்களும் விரும்பிக் கேட்டனர். அக்கால வானொலிகளில் மோகன் பாடல்கள் ஒலிபரப்பப்படாத நாள்களே இல்லை எனலாம். அவ்வளவு சிறப்புக்குரிய மோகனின் 80-ஸ் படங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

mohan

மூடுபனி

1980ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியவர் பாலுமகேந்திரா. இளையராஜா இசை அமைத்துள்ளார். பிரதாப் போத்தன், என்.விஸ்வநாதன், காந்திமதி, மோகன், பானுசந்தர், ஷோபா உள்பட பலர் நடித்துள்ளனர். என் இனிய பொன் நிலாவே, பருவ காலங்களின் ஆகிய மனது மறக்காத பாடல்கள் இந்தப்படத்தில் தான் உள்ளன.

கிளிஞ்சல்கள்

1981ல் வெளியான இப்படத்தை இயக்கியவர் துரை. டி.ராஜேந்தர் இசை அமைத்துள்ளார். மோகன், பூர்ணிமா ஜெயராமன், திலிப், வி.கே.ராமசாமி, செந்தில் உள்பட பலர் நடித்துள்ளனர். கிளை இல்லா மரங்களில், விழிகள் மேடையாம் இமைகள், அழகினில் விளைந்தது மழையினில், சின்ன சின்ன கண்ணா சேதி சொல்லும் ஆகிய பாடல்கள் உள்ளன.

பயணங்கள் முடிவதில்லை

1982ல் ஆர்.சுந்தரராஜன் இயக்கிய படம் பயணங்கள் முடிவதில்லை. கோவைத்தம்பி கதை எழுதியுள்ளார். மோகன், பூர்ணிமா ஜெயராம், பூரணம் விஸ்வநாதன், ராஜேஷ், எஸ்.வி.சேகர் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் நடித்த ஹீரோ, ஹீரோயின் இருவருக்குமே பிலிம்பேர் விருது கிடைத்தது.

mohan

இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் மாஸ் ரகங்கள். ஹே ஆத்தா, இளைய நிலா, மணி ஓசை, முதல் முறை, சாலையோரம், தோகை இளமயில் ஆகிய மனது மறக்காத பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

குங்குமச்சிமிழ்

1985ல் ஆர்.சுந்தரராஜன் இயக்கிய படம். மோகன், இளவரசி, வாகை சந்திரசேகர், ரேவதி, டெல்லி கணேஷ், செந்தில், லூஸ் மோகன், பயில்வான் ரங்கநாதன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் சூப்பர். பூங்காற்றே தீண்டாதே, நிலவு தூங்கும் நேரம், கூட்ஸ் வண்டியிலே, கை வலிக்குது, வைக்கலாம் நேத்தி ஆகிய பாடல்கள் உள்ளன.

இதயக்கோவில்

ithayakoil Mohan

1985ல் மணிரத்னம் இயக்கிய படம் இதயக்கோவில். மோகன், ராதா, அம்பிகா, சுரேஷ், கவுண்டமணி, செந்தில், சார்லி, தியாகு, ஒரு விரல் கிருஷ்ணராவ், ஓமக்குச்சி நரசிம்மன், மதன் பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். படம் செம ஹிட்டானது.

இதயம் ஒரு கோயில், யார் வீட்டில் ரோஜா, கூட்டத்திலே கோயில் புறா, பாட்டுத்தலைவன், நான் பாடும் மௌனராகம், வானுயர்ந்த சோலையிலே, ஊரோரமா ஆத்துப்பக்கம் ஆகிய சூப்பரான பாடல்கள் உள்ளன.

Next Story