கோபப்பட்ட இயக்குனர்!.. கமல் கொடுத்த அட்வைஸ்!.. கடைசி வரை ஃபாலோ பண்ணிய மைக் மோகன்!..
பெங்களூரை சேர்ந்த மோகன் பாலுமகேந்திரா இயக்கிய கோகிலா என்கிற படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். ஆனால், அவர் இந்த படத்தின் ஹீரோ இல்லை. இப்படத்தில் கமல்ஹாசன் ஹீரோவாக நடித்திருந்தார். சென்னையில் முதன் முதலாக 100 நாட்கள் ஓடிய கன்னட படம் இதுதான். அதன்பின் அதே பாலுமகேந்திரா இயக்கிய மூடுபனி படத்தில் நடித்தார் மோகன்.
அதன்பின் மகேந்திரன் இயக்கிய நெஞ்சத்தை கிள்ளாதே, ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய பயணங்கள் முடிவதில்லை ஆகிய படங்களின் வெற்றி கோலிவுட்டில் மோகனுக்கு என ஒரு மார்க்கெட்டை உருவாக்கியது. மோகன் நடித்த பல படங்கள் வெள்ளி விழா கண்டது. ஒருபக்கம் ரஜினி, கமல் படங்கள் ஓடினாலும் மோகனின் படங்களும் பல நாட்கள் ஓடியது.
இதையும் படிங்க: தியேட்டருக்கு போய் இந்த 3 படங்களையும் பாக்கணும்னு ஆசை!.. மைக் மோகன் போடும் லிஸ்ட்..
ஒருகட்டத்தில் சினிமாவிலிருந்து விலகினார் மோகன். 1999 வரை தொடர்ந்து நடித்து வந்த மோகன் அதன்பின் நடிப்பதை நிறுத்திவிட்டார். கடைசியாக சுட்ட பழம் என்கிற படத்தில் நடித்தார். இது 2008ம் வருடம் வெளியானது. இப்போது 25 வருடங்கள் கழித்து ஹரா என்கிற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
மேலும், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் படத்தில் வில்லனாகவும் நடித்திருக்கிறார். மீண்டும் சினிமாவில் நடிக்க வந்திருப்பதால் பல ஊடகங்களுக்கும் மோகன் பேட்டி கொடுத்து வருகிறார். அதில், பல விஷயங்களையும் அவர் பகிர்ந்து வருகிறார். குறிப்பாக முதன் முதலில் நடித்த கோகிலா படம் தொடர்பான அனுபவங்களை அவர் பகிர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: மோகன் நடிக்க வரலேன்னா என்ன வேலை பார்த்திருப்பார் தெரியுமா? கமல் படம் இவரால் தடையா?
அந்த படத்தில் சில நாட்கள் நடித்துவிட்டு வேறொரு படத்தில் நடிக்க போய்விட்டேன். என்னுடைய காட்சிகள் எடுக்க வேண்டியிருக்கிறது என்பதே எனக்கு தெரியாது. அதுவும் கமல் சாருடன் இணைந்து நடிக்க வேண்டிய காட்சிகள். எனக்காக அவரும் காத்திருந்தார். 3 நாட்கள் நான் போகவில்லை. அதன்பின் தந்தி கொடுத்து என்னை வரவழைத்தார்கள்.
படப்பிடிப்பு தளத்திற்கு போனதும் பாலுமகேந்திரா என்னிடம் பேசவே இல்லை. என்னை தனியாக அழைத்த கமல் ‘நன்றாக நடிக்கிறாய். ஏன் இப்படி செய்கிறாய்?’ என கேட்டார். ‘எனக்கு தெரியாது சார். என்னிடம் யாரும் சொல்லவில்லை’ என்றேன். எப்போது வரவேண்டும் என நீ போய் கேள். கையில் ஒரு டைரி வைத்துக்கொள். எப்போது எந்த படத்தில் நடிக்கிறோம் என குறித்து வைத்துக்கொள்’ என அறிவுரை சொன்னார். அதன்பின் எந்த படத்திற்கும் நான் கால்ஷீட்டில் சொதப்பியதே இல்லை’ என மோகன் கூறியிருந்தார்.