இந்த பாட்டு எப்படி ஹிட் அடிக்கும்?.. தயங்கிய மைக் மோகன்!.. சொல்லி அடித்த இளையராஜா...

அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைக்க துவங்கிய இளையராஜா 80களில் தமிழ் சினிமாவின் முக்கிய இசையமைப்பாளராக இருந்தார். அவரின் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் பாடியது. எங்கு திரும்பினாலும் அவரின் பாடல்கள்தான். எல்லோரும் முணுமுணுத்ததும் அவரின் பாட்டுக்கள்தான்.

80களில் உருவான 90 சதவீத படங்களுக்கு அவர்தான் இசையமைத்தார். பல மொக்கை படங்களும் இளையராஜாவின் இசையால் ஓடியது. 80 சதவீதம் படத்தில் தனது உழைப்பை ஒரு இயக்குனர் போட்டுவிட்டால் மீது 20 சதவீதத்தை இளையராஜா பார்த்துக்கொள்வார். பாடல்கள் மட்டுமில்லாமல் சிறப்பான பின்னணி இசையை கொடுத்தவர் இளையராஜா.

இதையும் படிங்க: இனிமே எவனாச்சும் பாடி ஷேமிங் பண்ணுவானா?.. ஒரேயடியாக உடம்பை குறைத்த மஞ்சிமா மோகன்!..

ரஜினி, கமல் என பல நடிகர்களுக்கும் இளையராஜா அற்புதமான பாடல்களை கொடுத்திருந்தாலும் மைக் மோகன் படங்களில் அவர் கொடுத்த பாடல்கள் 70 மற்றும் 80 கிட்ஸ்களின் ஃபேவரைட்டாக இப்போதும் இருக்கிறது. இப்போதும், பலரின் கார் பயணங்களில் மோகன் - இளையராஜா கூட்டணியில் உருவான பாடல்கள்தான் ஒலித்துகொண்டிருக்கிறது.

மோகன் படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது இளையராஜாவின் பாடல்கள்தான். மௌன ராகம், உதய கீதம், இதய கோவில் என பல படங்களை சொல்லலாம். உதய கீதம் படத்தில் மேடை பாடகராக நடித்திருப்பார் மோகன். செய்யாத ஒரு கொலையில் குற்றவாளியாகி தூக்கு தண்டனை கிடைத்துவிடும்.

இதையும் படிங்க: இளையராஜா பாடலாசிரியரை இப்படித்தான் நடத்துவார்! எழுத்தாளார் ஜெயமோகன் காரசார பேட்டி

தூக்கு தண்டனைக்கு முன் ஒரு குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு உதவுவதற்காக ஒரு கச்சேரியில் பாடுவார் மோகன். அதுதான், ‘உதய கீதம் பாடுவேன்’ பாடலாகும். இந்த பாடல் மிகவும் மெதுவாக இருக்கும். படத்தின் இறுதிக்காட்சியில் இந்த பாடல் வந்தால் அது ரசிகர்களை கவருமா.. படத்தின் ஓட்டத்தையே தடுத்துவிடுமா என்கிற சந்தேகம் மோகனுக்கு வந்துள்ளது.

எனவே, இயக்குனர் இதுபற்றி இளையராஜாவிடம் சொல்ல ‘இல்லை அப்படி ஆகாது பாடலில் வேகமான பின்னணி இசையை அமைத்திருக்கிறேன். படத்தின் ஓட்டத்தை அது தடுக்காது’ என சொல்லி இருக்கிறார். ஆனாலும், பயத்துடனே அந்த பாடல் காட்சியை படமாக்கி உள்ளனர். கடைசியில் இளையராஜா சொன்னதுதான் நடந்தது.

 

Related Articles

Next Story