Jananayagan: இப்படி பண்ணா சென்சார் எப்படி தருவாங்க! டெல்லியை விட கேள்வி எழுப்பும் மோகன் ஜி

Published on: January 21, 2026
mohan
---Advertisement---

2016 ஆம் ஆண்டு பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் மோகன் ஜி. அடுத்து திரௌபதி என்ற படத்தை 2020 ல் இயக்கினார். அந்தப் படம் பெரிய சர்ச்சையை கிளப்பியது. ஆனால் விமர்சன ரீதியாக அந்தப் படம் வெற்றியை பெற்றது. அடுத்து செல்வராகவனை வைத்து பகாசுரன் என்ற படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பிரச்சினையில் மாட்டுவது மோகன் ஜியின் வழக்கம். தற்போது திரௌபதி 2 படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று கூறப்பட்டது. ஆனால் தியேட்டர் பிரச்சினையால் ஜனவரின் 23 ஆம் தேதி படம் ரிலீஸாக இருக்கிறது.ஏற்கனவே திரௌபதி படம் பெரும் சர்ச்சையில் சிக்கிய நிலையில் அதன் இரண்டாம் பாகமும் அப்படித்தானே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்தப் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கொடுக்கப்பட்டு விட்டது. அதற்கான காரணத்தை மோகன் ஜி கூறியிருக்கிறார். இந்தப் படத்திலேயும் 19 கட்ஸ் இருந்தது. ஆனால் சென்சாருக்கு போகாமல் நீங்க ரிலீஸ் தேதியை எப்படி அறிவிக்கமுடியும். சினிமாவை பொறுத்தவரைக்கும் எல்லா படங்களும் அப்படித்தான் செய்கின்றன. ஆனால் அது தவறு என்று மோகன் ஜி கூறினார்.

மேலும் திரௌபதி படத்தை பொறுத்தவரைக்கும் ஒரு புத்தகத்தில் வந்த ஒரு வரலாற்று கதை. அதனால் அதற்கான ஆதாரத்தையும் சென்சாருக்கு கொடுக்க வேண்டும். சென்சாருக்குனு ஒரு புத்தகமே இருக்கிறது. எனக்கு சென்சார் பிரச்சினை வராததற்கு காரணம் படத்தை வரலாற்று பின்னணியில் எடுத்தேன். அதனால்தான் பிரச்சினை பெருசா இல்ல. அந்த மாதிரி கேரக்டர் இருந்திருப்பார்கள். ஆனால் வசனங்கள் மாறுபடலாம். அதற்குத்தான் இந்த சம்பவம் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் இல்லை. முழுவதும் கற்பனையே என்று போடப்படும்.

அதையும் மீறி எதாவது சென்சாரில் பிரச்சினை வருகிறது என்றால் நம்மகிட்ட ஆதாரம் இருந்தால் அதை கொடுத்து வெளியே வந்துவிடலாம். அதையும் மீறி தனிப்பட்ட தலைவரை தாக்குவது மாதிரியோ அல்லது தனிப்பட்ட கொள்கையை தாக்குதல் நடத்தினாலோ கட் கொடுப்பார்கள். தேதியை அறிவிச்சுட்டு சென்சாருக்குள்ள போகவே கூடாது. நீங்களா எப்படி அதை முடிவு பண்ணலாம்? சென்சார் என்னைக்கு வரும்னு நீங்களா சொல்ல முடியுமா?

சிவகார்த்திகேயன் பராசக்தி ஆடியோ லாஞ்சில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுதுனு சொல்றாரு. அன்றைய தேதியில் பராசக்தி சென்சாருக்கு போகவில்லை. ஆனால் அவர் சொன்ன பொங்கல் எந்த வருஷ பொங்கல்னு சொன்னாரா? அப்படி சொல்லலாம். ஆனால் இந்த தேதியில் வருதுனு சொல்ல கூடாது. இதுதான் ரூல். அதை உடைக்கணும்னு நினைச்சா உடைச்சுக்கோங்க. அதோடு சென்சாருக்கு நாம் அப்ளை செய்ததில் இருந்து 60 நாள்கள் சென்சார் கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாம். இதையெல்லாம் சென்சார் மீறினால் மட்டும்தான் நாம் நீதிமன்றத்தை நாட வேண்டும் என மோகன் ஜி கூறியிருக்கிறார்.