துடரும் படம் மோகன்லாலுக்கு பெஸ்ட்! புளூசட்டை மாறன் குறையே சொல்லாம பாராட்டிட்டாரே!..

by sankaran v |   ( Updated:2025-04-26 01:10:47  )
thudarum
X

thudarum

Thudarum: மோகன்லால் நடிப்பில் வெளியாகி உள்ள துடரும் படம் பற்றிய விமர்சனத்தை புளூசட்டை மாறன் தந்துள்ளார். என்னன்னு பாருங்க.

இயக்குனர் தருண்மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி உள்ள படம் துடரும். மோகன்லால் சென்னையில சினிமா பைட்டரா இருக்காரு. அப்படி இருக்கும்போது சில பல காரணங்களால சொந்த ஊருக்கே போயிடுறாரு.

போற வேளையில் அவரது குருநாதர் ஒரு காரை அன்பளிப்பா கொடுக்குறாரு. அந்தக் காரை எடுத்துக்கிட்டு ஊருக்கு வர்றாரு. அது மேல அளவுகடந்த பிரியம். அந்தக் காரு மேல யாராவது கையை வச்சா கூட சண்டைக்குப் போயிடுவாரு. ஒரு சூழல்ல அவரு காரு ஒரு கேஸ்ல மாட்டி போலீஸ் எடுத்துட்டுப் போயிடுது. காரை எப்படியாவது மீட்கணும்னு அதுக்காகப் போராடுறாரு. அதுதான் கதை. ஆனா படத்தோட மையக்கதை வேற.

இது ஒரு கிரைம் திரில்லர் படம். மலையாளத்துல பெரும்பாலும் கிரைம் திரில்லர் படம். இது எமோஷனலா போகுது. திரிஷ்யத்தை நினைவு படுத்தினாலும் இது வேற மாதிரி போகுது. படத்தை முடிகிற வரைக்கும் யூகிக்க முடியாத அளவு போகுது. படத்துல வில்லன் கேரக்டர் பிரகாஷ்வர்மா எக்ஸ்ட்ராடினரியா நடிச்சிருக்காரு. வரப்போற எல்லா பேன் இண்டியா படத்துலயும் இவரு வில்லனா நடிக்க வாய்ப்பு இருக்கு.

மோகன்லால் திரிஷ்யத்துக்கு அப்புறம் பெஸ்டைக் கொடுத்துருக்காரு. ஷோபனா நல்லா நடிச்சிருக்காங்க. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்னு எல்லாமே அற்புதமா இருக்கு. இந்தப் படம் ராவா இல்லாம சூப்பரா இருக்கு. பேமிலியோட பார்க்கலாம். நல்ல கிரைம் திரில்லரைப் பார்த்த திருப்தி கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

படத்தைப் பற்றி இவர் மேலும் கூறுகையில், நான் அடிக்கடி சொல்றது இதுதான். ஒரு படம் நல்லா ஓடணும்னா வில்லன் ரோல் கெத்தா இருக்கணும். அப்பத்தான் படம் ஓடும். அந்த வகையில இந்தப் படத்துல வில்லன் ரோல் வெயிட்டா இருக்கு. படத்துல வன்முறை அதிகமா இருக்கு. இருந்தாலும் பேமிலியோட பார்க்கலாம் என்றும் சொல்கிறார் புளூசட்டை மாறன்.

Next Story