Cinema News
எரிகிற நெருப்புல எண்ணெயை ஊத்தறதுக்கு நான் வரல!.. பொங்கி எழுந்த மோகினி டே!..
ஏ ஆர் ரகுமான் மற்றும் மோகினி டே இருவருக்கும் இடையே இருக்கும் தொடர்பு குறித்து சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில் அதற்கு மோகினி டே விளக்கம் அளித்து இருக்கின்றார்.
இந்திய சினிமாவில் இசைப்புயல் என்று செல்லமாக அழைக்கப்பட்டு வந்தவர் ஏ ஆர் ரகுமான். கடந்த சில நாட்களாகவே அவரின் பேச்சு தான் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது. ஏ.ஆர் ரகுமானின் மனைவி சாய்ரா தனது வழக்கறிஞர் மூலம் ஏ ஆர் ரகுமானை பிரிவதாக சமூக வலைதள பக்கத்தில் அறிவித்திருந்தார்.
இதையும் படிங்க: சமந்தாவுக்கும் இப்படித்தான் செஞ்சீங்க… நாக சைத்தன்யாவை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!
இந்த அறிவிப்பு மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்படுத்தியிருந்த நிலையில் சிறிது நேரத்திலேயே ஏ ஆர் ரகுமான் இந்த அறிவிப்புக்கு பதில் கொடுத்து விவாகரத்தை உறுதி செய்திருந்தார். இவர்களுக்கு திருமணமாகி கிட்டத்தட்ட 29 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது எதற்காக விவாகரத்து செய்ய வேண்டும் என்று சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றது. இந்த செய்தி ஏ ஆர் ரகுமான் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருந்தது.
இந்த சம்பவத்திலிருந்து வெளியில் வருவதற்குள் மற்றொரு சர்ச்சை பின் தொடர்ந்து வந்து விட்டது. அதாவது ஏ ஆர் ரகுமான் இசைக்குழுவில் இருக்கும் கிதார் வாசிப்பாளர் மோகினி டே தனது கணவரை விவாகரத்து செய்யப் போவதாக தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்திருந்தார்.
உடனே ஏ ஆர் ரகுமானுக்கும் மோகினி டேக்கும் ஏதோ தொடர்பு இருக்கின்றது என்று சமூக வலைதள பக்கங்களிலும் பத்திரிகைகளிலும் எழுத தொடங்கி விட்டார்கள். இதற்கு ஏ ஆர் ரகுமானின் மகள் ரஹீமா மற்றும் மகன் அமீன் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தார்கள். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மோகினி டே தனது சமூக வலைதள பக்கத்தில் சில கருத்துக்களை பதிவிட்டு இருக்கின்றார்.
அதில் அவர் தெரிவித்திருந்ததாவது ‘என்னை நேர்காணல் எடுக்க பல கோரிக்கைகள் குவிந்த வண்ணம் இருக்கின்றது. என்ன காரணம் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். நான் எரிகின்ற நெருப்பில் எண்ணெயை ஊற்ற விரும்பவில்லை. என்னை நேர்காணல் எடுப்பதற்காக அணுகியவர்கள் அனைவரிடமும் முடியாது என்று தான் கூறிவிட்டேன்.
இதையும் படிங்க: அவர் ‘Gen Z’ டைரக்டர்லாம் கிடையாது?!.. என்னப்பா லோகேஷ் பத்தி இப்படி சொல்லிட்டாரு நாகார்ஜுனா!…
சர்சைகளுக்கு பதில் அளித்துக் கொண்டு அதன் பின்னால் ஓடி எனது நேரத்தையும், சக்தியையும் வீணடிக்க விரும்பவில்லை. எனது தனி உரிமையையும், சுதந்திரத்தையும் மதிக்க வேண்டும்’ என்று கேட்டிருக்கின்றார். இந்த பதிவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. சினிமாவில் பல ஆண்டுகளாக பெரும் புகழோடும் இருந்து வந்த ஏ ஆர் ரகுமான் தற்போது வரை எந்த ஒரு சர்ச்சைகளிலும், கிசுகிசுகளிலும் சிக்காத ஒரு மனிதர். தற்போது தனது காதல் மனைவியால் தொடர்ந்து பல பிரச்சனைகளை அனுபவித்து வருகின்றார் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.