மோனிகா சொல்றது பொய்! இமான் கூடவே இருந்த எனக்கு எல்லாமே தெரியும் – பிரபல நடிகை சொன்ன பகீர் தகவல்

Published on: October 20, 2023
moni
---Advertisement---

Imaan – Sivakarthikeyan: லியோ பரபரப்பில் இமான் – சிவகார்த்திகேயன் கதையை எல்லாரும் மறந்துட்டாங்க போல. இருந்தாலும் அந்த பிரச்சினை ஒரு பக்கம் போய்க் கொண்டுதான் இருக்கின்றது. திடீரென்று இமான் இப்படி ஒரு பேட்டியை கொடுப்பார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. அதை பார்த்த பிரபலங்கள் பலருக்கும் ஆச்சரியத்தை வரவழைத்திருக்கிறது.

சிவகார்த்திகேயன் தனக்கு செய்த துரோகத்தை வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டேன், அவருடன் சேர்ந்து இனி படம் பண்ணுவது என்பது கனவிலும் கூட நடக்காத காரியம் என இமான் கூறியிருந்தார். அப்படி அவர்களுக்குள் என்னதான் பிரச்சினை என அலசி ஆராய்ந்து பார்த்தால் ,

இதையும் படிங்க: வேற ஒன்னும் இல்ல! மிருக தோஷம்தான்! பறவை, விலங்கு பேர்ல டைட்டில் வச்சு பல்பு வாங்கிய விஜய் படங்கள்

ஒவ்வொருவரும் ஒருவித காரணங்களை கூறிவருகின்றனர். ஆனால் சம்பந்தப்பட்டவர்களே வந்து சொன்னால்தான் எது உண்மை என இந்த உலகத்துக்கு புரிய வரும். இதற்கிடையில் இமானின் பேட்டியை தொடந்து அவர் முதல் மனைவி மோனிகாவும் தன் பங்குக்கு பேட்டி கொடுத்து தவளை தன் வாயால் கெடும் என்பதை போல் மாட்டிக் கொண்டார்.

சிவகார்த்திகேயன் எங்களை சேர்த்து வைக்கத்தான் வந்தார் என்றும் அவர் ஒரு ஜெண்டில்மேன் என்றும் எங்களுக்குள் நல்ல நட்பு இருந்து வந்தது என்றும் கூறி ஒட்டுமொத்த சந்தேகத்திற்கும் விளக்கம் கொடுத்து தெளிவு படுத்திவிட்டார்.

இதையும் படிங்க: பாத்தவுடனே ஜூமிங்தான்!.. தூக்கலான கவர்ச்சியில் விருந்து வைக்கும் தமன்னா…

இதற்கிடையில் இமான் எனக்கு ஜீவனாம்சமாக எதுவும் கொடுக்கவில்லை என்றும் ஏற்கனவே இப்போது இருக்கும் மனைவியுடன் இமான் திருமணத்திற்கு முன்பாகவே அவருடன் பழகி வந்ததாகவும் அதனால்தான் எங்களுக்குள் விவாகரத்து ஏற்பட்டதாகவும் கூறியிருந்தார்.

ஆனால் அவையெல்லாம் பொய் என பிரபல நடிகை குட்டி பத்மினி கூறியிருக்கிறார். இமான் வீட்டிற்கும் குட்டி பத்மினிக்கும் மிகவும் நெருக்கமாம். ஒரு அம்மாவை போலத்தான் இமானிடம் குட்டி பத்மினி பழகிவருகிறாராம். ஜீவனாம்சம் கொடுக்கவில்லை என்பதெல்லாம் பொய். மோனிகாவிற்கு கொடுக்க வேண்டியதை கொடுத்துக் கொண்டிருக்கிறார் இமான். இப்போது வரைக்கும் அவருடைய இரண்டு பெண் குழந்தைகளின் படிப்பு செலவையும் இமான் தான் பார்த்துக் கொள்கிறார் என குட்டி பத்மினி கூறினார்.

மேலும் இமானும் அவருடைய தந்தையும் ஒரு நாள் குட்டி பத்மினி வீட்டிற்கு சென்று நடந்த சம்பவங்களை அவர்களுக்குள் இருந்த சோகங்களை எல்லாம் குட்டிபத்மினியிடம் பகிர்ந்திருக்கிறார்களாம்.

இதையும் படிங்க: ஆட்சி கலைந்தபோது எம்.ஜி.ஆர் செய்து கொண்டிருந்த அந்த விஷயம்!. மிஸ்டர் கூல் இவர்தான் போல!..

அதுமட்டுமில்லாமல் இப்போது இரண்டாவதாக திருமணம் செய்திருக்கும் அமலி என்ற பெண்ணை நாங்கள்தான் இமானுக்கு அறிமுகம் செய்துவைத்ததாகவும் விவாகரத்திற்கு பிறகு அமலியை கல்யாணம் செய்ய அவரை புரிந்து கொள்வதற்காகவே ஒருவருடம் அமலியுடன் பழகிவந்தார் என்றும் ஆனால் இவையெல்லாம் விவாகரத்திற்கு பிறகு நடந்தவை என்றும் குட்டிபத்மினி கூறினார்.

அதுமட்டுமில்லாமல் இமானின் மொத்த சொத்தில் முதல் மனைவிக்கு பிறந்த இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் இரண்டாவது மனைவிக்கு இருக்கும் ஒரு பெண் குழந்தை என மூன்று பேருக்கும் சொத்தில் சம பங்கு பிரித்துக் கொடுப்பதாகவும் இமான் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.