100 கோடி அவ்ளோதான்!.. தீபாவளி ரேஸிலிருந்து விலகும் மூக்குத்தி அம்மன் 2!..

மூக்குத்தி அம்மன் 2 ரிலீஸ் தேதி அப்டேட்..

mookuthi

கடந்த 30 வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் திரைப்படங்களை இயக்கி வருபவர் சுந்தர்.சி. ஜாலியான கலகலப்பான குடும்ப பங்கான திரைப்படங்களை இயக்குபவர் சுந்தர்.சி. குறிப்பாக காதல், கலந்த காமெடி திரைப்படங்களை எடுப்பதில் சுந்தர் சி கில்லாடி. அவரின் இயக்கத்தில் வெளியான 95 சதவீத திரைப்படங்கள் வெற்றிப் படங்கள்தான்.

சமீபகாலமாக பக்தி கலந்த ஹாரர் திரைப்படங்களை அவர் இயக்கி வருகிறார். அப்படி அவர் இயக்கிய அரண்மனை 4 பாகங்களும் வெற்றிப்படங்களாக அமைந்த நிலையில் தற்போது நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கிறார்..

இந்த படத்தை தீபாவளிக்கு வெளியிடலாம் என திட்டமிட்டிருந்தனர். ஆனால் சில நாட்களுக்கு முன்பு இந்த படம் தொடர்பான கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது. அதில் இடம்பெற்ற கிராப்கிக்ஸ் காட்சிகளை பார்த்த ரசிகர்கள் ‘ஜீ தமிழில் வரும் சீரியல் போல இருக்கிறது’ என பயங்கரமாக ட்ரோல் செய்தனர்.

இதைப்பார்த்து சுந்தர்.சியும், படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேசனும் அதிர்ச்சி அடைந்துள்ளனராம். ஏனெனில், மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் ஐசரி கணேஷ் ரூ.100 கோடியை முதலீடு செய்திருக்கிறார். நெகட்டிவ் விமர்சனங்கள் காரணமாக படம் ஊத்திக் கொண்டால் மொத்த பணமும் போய்விடும் என்கிற பயத்தில் சுந்தர்.சியிடம் பேசினாராம்.

தற்போது படத்தில் இடம்பெற்றிருக்கும் கிராபிக்ஸ் காட்சிகளை இன்னும் சிறப்பாக அமைக்கும் பணியில் படக்குழு ஈடுபட்டிருக்கிறது. இதன் காரணமாக தீபாவளி ரிலீஸிலிருந்து மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் தள்ளிப்போகும் என செய்திகள் வெளியாகியிருக்கிறது.

CR
ஆசிரியர்

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி [email protected]

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →