தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் விஜயகாந்த். ரஜினியை விட அவருக்கு அதிக ரசிகர்கள் இருந்த காலம் உண்டு. குறிப்பாக கிராம பகுதிகளில் விஜயகாந்துக்கும் அதிகமான ரசிகர்கள் இருந்தார்கள். அவரின் திரைப்படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றது. அவர் நடித்த பல திரைப்படங்கள் வெள்ளிவிழா படமாக இருந்தது.
விஜயகாந்த் நடிப்பில் சில படங்கள் சில நாட்கள் மட்டும் படப்பிடிப்பு முடிந்து டிராப் ஆன கதை உண்டு. அதில், மூங்கில் கோட்டை திரைப்படமும் ஒன்று. இந்த படம் பற்றி பேசுவதற்கு முன் நாம் ஊமை விழிகள் படம் பெற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
திரைப்பட கல்லூரி மாணவர்கள் சேர்ந்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி உருவான திரைப்படம் ஊமை விழிகள். இப்படத்தில் விஜயகாந்த் சிறப்பு வேடத்தில் நடித்திருப்பார். தன்னை ஒரு பெண் காதலித்து ஏமாற்றி சென்றுவிட பல பெண்களை ஒருவன் கொடூரமாக கொலை செய்யும் திரில்லர் கதை.
இதையும் படியுங்க: இப்படி ஆகிப்போச்சே!…தலையில் மேல் கை வைத்த சிம்பு ரசிகர்கள்…
இப்படதில் சந்திரசேகர், அருண் பாண்டியன், ஜெய் சங்கர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இப்படத்தை அரவிந்த ராஜ் இயக்கியிருந்தார். ஆபாவாணன் இப்படத்தை தயாரித்தார். இப்படத்தின் பாடல்கள் செம ஹிட்.1986ம் ஆண்டு இப்படம் வெளியானது.
இப்படம் வெற்றி பெறவும் இதன் அடுத்த பாகமாக ‘மூங்கில் கோட்டை’ திரைப்படம் உருவாகியது. இதில், விஜயகாந்த் முக்கிய வேடத்தில் நடித்தார். இப்படத்தையும் அரவிந்த் ராஜ் இயக்க, ஆபாவணன் தயாரித்தார். ஆனால், படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் முடிந்த நிலையில் பட்ஜெட் காரணமாக இப்படம் கைவிடப்பட்டது. அதாவது, எதிர்பார்த்த பட்ஜெட்டை விட அதிகமாக செலவு சென்றதால் ஆபாவாணன் இப்படத்தை கை விட்டார்.
இதையும் படிங்க: டிராப் ஆன விஜயகாந்த் படம்… இந்த படம் மட்டும் வந்திருந்தா வேற லெவல்…
இப்படம் வந்திருந்தால் ஊமை விழிகள் போல் மற்றொரு அசத்தலான திரில்லர் திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கிடைத்திருக்கும்.
கங்குவா திரைப்படத்தில்…
சிவகார்த்திகேயனைப் பொருத்த…
கங்குவா படத்தின்…
தனுஷ், நயன்தாரா…
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…