Connect with us
avm rajan

Cinema History

சாவின் விளிம்புக்கே சென்ற ஏவிஎம் ராஜன்… இந்த நிலைமைக்கு காரணமே இவங்கதானாம்…

Actor AVM Rajan: ஏவிஎம் ராஜன் தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர்களில் ஒருவர். இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சாதுவாக நடிப்பதில் வல்லவர். நிஜவாழ்வில் இவர் ஒரு சிறந்த மனிதரும் கூட. சிவாஜி, எம்ஜிஆர் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

1959ஆம் ஆண்டு சிவகங்கை சீமை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். பின் எங்க வீட்டு பெண், பூவும் பொட்டும் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சிவாஜியுடன் இணைந்து தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் சிவாஜியின் தம்பியாக நடித்திருந்தார்.

இதையும் வாசிங்க:இத மட்டும் காட்ட சொல்லுங்க!.. நான் மீசையை எடுக்குறேன்.. மீண்டும் சவாலுக்கு ரெடியான மீசை ராஜேந்திரன்…

மேலும் எம்ஜிஆருடன் இணைந்து எங்கள் தங்கம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் பொதுவாக சாதுவான கதாபாத்திரத்திலேயே நடித்திருந்தார். இவரின் படங்கள் ரசிகர்களால் பெரிதளவில் ரசிக்கப்பட்டது. நிஜவாழ்விலும் இவர் மென்மையான குணமுடையவர்தானாம்.

பல வெற்றிப் படங்களை பார்த்த இவருக்கு வில்லங்கமாய் அமைந்தது அடுத்தகட்ட சினிமாதான். சிவாஜி எம்ஜிஆர் போன்ற நடிகர்களின் ஆதிக்கம் குறைந்தபின் ரஜினி கமல் போன்ற நடிகர்களின் ஆதிக்கம் வர ஆரம்பித்தது. அந்த காலத்தில் இவரின் சினிமா வாய்ப்புகளும் குறைந்தது.

இதையும் வாசிங்க:ராக் ஸ்டாரை மாத்தி ராபரி ஸ்டார்னு வச்சிக்கோ!. அனிருத்தை விளாசிய புளூசட்ட மாறன்…

அந்த சமயத்தில் நடிகராய் இருந்த இவர் தயாரிப்பாளராக தனது அத்தியாயத்தை தொடங்கினார். ஊரும் உறவும் போன்ற திரைப்படங்களை தயாரித்தார். ஆனால் அதுவும் அவருக்கு கை கொடுக்கவில்லை. பின் தனது தயாரிப்பு நிறுவனத்தை விற்றுவிட்டு மிகுந்த கடனில் இருந்துள்ளார்.

இருக்க இடம் கூட இல்லாத இவர் பின் ஒரு நாள் தனது இறக்கும் நாளை தானே தீர்மானித்தார். மறுநாள் காலையில் தற்கொலை செய்யும் எண்ணத்தில் இருந்துள்ளார். மறுநாள் காலையில் அதற்கும் தயாராகியுள்ளார். ஆனால் அவருக்கு ஏதோ ஒரு உள்ளுணர்வு தோன்றியுள்ளது. தான் சிறுவயதில் பழகிய பாதிரியாரின் குரல் கேட்பது போன்று தோன்றுகிறது. அதனால் தனது இறப்பை ஒரு நாள் தள்ளி வைக்கிறார்.

ஒரு குழப்பமான மனநிலைமையுடன் வீட்டிற்கு சென்ற ராஜனுக்கு மறுநாள் காலையில் அவரது இல்லத்திற்கு கடன் கொடுத்தவர் வருகிறார். அப்போது அவர் ராஜனை தனது அலுவலகத்திற்கு வரும்படி கூறுகிறார். மேலும் வட்டியை கட்ட வேண்டாம், அசலை மட்டும் அதிலும் பாதியை மட்டும் கொடுத்தால் போதும் என கூறுகிறார். இவ்வாறு இருந்த ஏவிஅம் ராஜன் தனது வாழ்நாளை பாதிரியாராக கழித்து வருகிறார்.

இதையும் வாசிங்க:பகல் கொள்ளையா இருக்கே!.. லியோ படத்தால் தியேட்டர்களுக்கு நஷ்டம்!.. திருப்பூர் சுப்பிரமணியம் பகீர்!..

google news
Continue Reading

More in Cinema History

To Top