எப்ப பாரு பொய் பேசும் திரை நட்சத்திரங்கள்!.. ரசிகர்களை காக்கா பிடிக்க அதையே செய்யும் விஷால்!..

Published on: January 22, 2024
---Advertisement---

Vishal: தமிழ் சினிமாவிற்கு ஒரு பழக்கம் இருக்கிறது. ரொம்ப சவடாலாக பொதுவெளியில் சொல்லும் விஷயங்களை செய்யவே மாட்டார்கள். அப்படி நிறைய சம்பவங்கள் நடந்து இருக்கும் நிலையில், அந்த லிஸ்டில் தற்போது விஷாலும் இணைந்து இருப்பதாக பத்திரிக்கையாளர் அந்தணன் தெரிவித்துள்ளார்.

அந்தணன் பேசுகையில், முத்துகுமார் என்ற ஒரு இளைஞர் ஈழ பிரச்னை பற்றி எரிந்து கொண்டு இருந்ததால் தற்கொலை செய்துகொண்டு என் உடலை வைத்து போராட்டம் செய்யுங்கள் என்றார். அவர் இறப்பே ஊர்வலமாக நடந்தது. அதில் நிறைய பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: இவனையெல்லாம் ஏன் உள்ள விட்டீங்க!. சிவாஜியை அசிங்கப்படுத்திய எம்.ஜி.ஆர் பட இயக்குனர்…

அப்போது அந்த வருடம் வரும் எல்லா படத்தின் ஹீரோவுக்கும் முத்துகுமார் எனப் பெயர் வைக்கப்படும் என சபதமிட்டனர். 2 படங்கள் மட்டுமே அதை காப்பாற்றியது. அப்போ கைத்தட்டல் வாங்கணும் அவ்வளவு தான் அவர்கள் எண்ணம். டைரக்டர் தரணி இயக்கிய கில்லி படத்தின் ஆடியோ ரிலீஸ் சென்னையில் இருக்கும் பார்வையில்லாதோர் பள்ளியில் நடந்தது.

அப்போ மாணவி ஒருவர் பிரமாதமாக பாடினார். அதை கேட்ட தரணி தன்னுடைய அடுத்த படத்தில் இவருக்கு வாய்ப்பு என்று சொன்னது தான். ஆனால் அது நடக்கவே இல்லை. அதுப்போல தொழிலாளி ஒருவர் விஸ்வரூபம் பாடலை பாடி இருந்தார். அந்த வீடியோவை கமலுக்கு ஷேர் செய்து அவரும் அந்த ஆளை தூக்கி வரச் சொல்கிறார். அவரும் நான் வாய்ப்பு தரேன் என்கிறார் கமல்.

இதையும் படிங்க: ஸ்ட்ரெச்சர்ல தூக்கிட்டு போற அளவுக்கு என்ன நடந்தது? ஃபோட்டோ போட்டு ஷாக் கொடுத்த அருண்விஜய்

இவர் நினைச்சு இருந்தா இவர் படத்தில் ஒரு நல்ல வேடத்தில் உன்னை நடிக்க வைக்கிறேன் என்ற வாய் வரவில்லை. விஜயகாந்த் வாய்ப்பு கொடுத்த மாதிரி அவர் பிள்ளைக்கு நீங்க வாய்ப்பு கொடுக்கிறீர்களா? சும்மா கைத்தட்டல் வாங்கணும்னு பேசாதீங்க எனவும் காட்டமாக தெரிவித்துள்ளார்.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.