Categories: Cinema News latest news

விஜய்க்கு பெர்சனலா ஒன்னு சொல்லனும்! கட்சி பெயரை அறிவித்ததும் தாய் ஷோபா அனுப்பிய ஆடியோ

Actor Vijay: தற்போது விஜய் ரசிகர்கள் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் ஹேஸ் டேக்கை ஆரம்பித்து இணையத்தில் டிரெண்டிங்காக்கி வருகிறார்கள். விஜய் தனது ரசிகர்கள், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை வைத்து அவ்வப்போது பல்வேறு உதவிகளை செய்து வந்த நிலையில் இந்த அந்த ரசிகர்கள் அனைவரும் விஜய்க்கு தொண்டர்களாக மாறியிருக்கிறார்கள்.

ஆம் விஜய் தனது அரசியல் கட்சி பெயரை அறிவித்ததும் அத்தனை ரசிகர்களும் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். அரசியலில் இருக்கும் பிரபலங்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை அனைவரும் விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Also Read

இதையும் படிங்க: காலம் என்னை கொண்டு போகும்!… அரசியல் குறித்து விஜய் அப்போதே இப்படி பேசி இருக்காருப்பா!.. உண்மை தான் போல

அதில் விஜயின் அம்மா ஷோபாவும் அவருடைய வாழ்த்தை தொலைபேசி மூலமாக தெரிவித்திருக்கிறார். பத்திரிக்கையாளர்கள் ஷோபாவை தொலைபேசியின் வாயிலாக அழைத்து பேசிய போது அவர் கூறியதாவது : விஜய்க்கு அம்மாகவும் சமூக பொறுப்புள்ள ஒரு பெண்மணியாய் உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன். அரசியலை பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்ல மாட்டேன்.

எல்லாருக்குமே அரசியல் பொறுப்பு இருக்கிறது.அத்தனை அரசியல் பொறுப்புள்ள மக்களின் அபிமானங்களை பெற்ற விஜய்க்கு அரசியலில் நுழையும் பொறுப்பு இருக்கிறது என நான் நினைக்கிறேன். புயலுக்கு பின் அமைதி என சொல்வார்கள். ஆனால் விஜயின் அமைதிக்கு பின்னால் ஒரு பெரிய அரசியல் புரட்சியே இருக்கிறது என நான் நம்புகிறேன்.

இதையும் படிங்க: 1972 முதல் 2024 வரை.. கட்சி ஆரம்பித்த நடிகர்கள்! எல்லாரையும் நம்பியாச்சு.. இவரையும் நம்புவோம்

மேலும் விஜய்க்கு ஓட்டுப்போடப் போகும் ஒரு அம்மாவாக நான் சந்தோஷமாக இருக்கிறேன். பெயருக்கு ஏற்றாற்போல் இந்த தமிழகம் வெற்றி பெறும். விஜய்க்கு பெர்சனலாக ஒன்று சொல்ல வேண்டுமென்றால் ‘விஜய் உனக்கு எதுவும் சொல்ல வேண்டிய அவசியமில்லப்பா. கேரி ஆன். ஆல் தி பெஸ்ட். வாகை சூடு விஜய்’ என கூறி தனது சந்தோஷத்தை பகிர்ந்திருந்தார் ஷோபா.

 

Published by
Rohini