Vettaiyan: ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்து நேற்று உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் வேட்டையன். துவக்கத்தில் இந்த படம் சிறப்பாக இருப்பதாக பலரும் சொன்னார்கள். அதன்பின் படத்தின் முதல் பாதி ஓகே. இரண்டாம் பாதி கொஞ்சம் இழுவை என சிலர் சொன்னார்கள். இப்படி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது வேட்டையன்.
இந்நிலையில், கமர்ஷியல் மசாலா படங்களை கலாய்த்து ரிவ்யூ போடும் புளூசட்டமாறன் வேட்டையனை பங்கம் செய்து வீடியோ போட்டிருக்கிறார். அவர் பேசியிருப்பதாவது:
குற்றவாளிகளை என்கவுண்டர் செய்தால் மட்டுமே குற்றங்கள் குறையும் என நம்புவர் ரஜினி. பலரையும் என்கவுண்டர் செய்கிறார். ஆனால், என்கவுண்டர் தவறு என்கிற கருத்தை கொண்ட மனித உரிமை அதிகாரியாக வருகிறார் அமிதாப்பச்சன். அவர் நன்றாகவே நடித்திருக்கிறார்.
ஒருபக்கம், துஷரா விஜயன் கஞ்சா கடத்துபவர்களை பற்றி போலீசாரிடம் புகார் கொடுக்க சில நாட்களில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்படுகிறார். எனவே, அதில் தொடர்புடைய ஒருவனை என்கவுண்டர் செய்கிறார் ரஜினி. ஆனால், அதில் ஒரு தவறு நடந்திருப்பதை கண்டுபிடித்து அடுத்து என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து நம்மையும் செய்கிறார். வழக்கமாக கார்ப்பரேட் வில்லனாக ஜகபதி பாபு வருவார். இதில் டகபதி பாபு வருகிறார். அவ்வளவுதான் வித்தியாசம். அதே கோட், அதே கண்ணாடி பில்டிங், அதே எலிகாப்டர், அதே டெய்லர், அதே வாடகை என எல்லாம் அதேதான். இரண்டாம் பாதியில் நடக்கும் எல்லாம் காட்சிகளையும் நாம் சுலபமாக கணித்துவிடலாம். அப்படி படத்தை எடுத்து வைத்திருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் 5 கதைகளைத்தான் மாறி மாறி எடுப்பார்கள் விவசாயத்தை பாதுகாப்போம் என்பார்கள், ரவுடிகளை அழிக்க ஹீரோ வருவார், கஞ்சா கடத்தலை காட்டுவார்கள், கார்ப்பரேட் வில்லனுக்கு எதிராக ஹீரோ களம் இறங்குவார். அல்லது ஒரு பெண்ணை ஒருவன் பலாத்காரம் செய்து கொலை செய்வான். அவனை ஹீரோ பழிவாங்குவார்.
இது எல்லாமே வேட்டையன் படத்தில் இருக்கிறது. தப்பான ஒருவனை என்கவுண்டர் செய்யும் தலைவரே ஒரு குற்றவாளிதான். நியாயமா பார்த்தா மேலதிகாரிகள் அவரை என்கவுண்ட்டர் செய்திருக்கணும். ஆனால், தலீவரோ நமக்கு பாடம் எடுத்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்தில எல்லாம் இருக்கி.. படத்தை பாக்கணுமா வேணாம்கிறது உங்க கையில இருக்கி’ என கலாய்த்திருக்கிறார் மாறன்.
தமிழ் சினிமாவில்…
கங்குவா திரைப்படம்…
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை…
இட்லி கடை…
கங்குவா படத்தின்…