திரிஷாவை இப்படியா பண்ணுவீங்க மிஸ்டர் சிரஞ்சீவி... அம்மணியோட டயட்டைக் கெடுத்துட்டீகளே..!
நடிகை நயன்தாராவுக்கு கொஞ்சமும் சளைக்காமல் அவருக்கு இணையான புகழைக் கொண்டவர் திரிஷா. சிம்ரன், ஜோதிகா ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்திலேயே தமிழ்த்திரை உலகில் நுழைந்து வெற்றி நடை போட்டவர். முதலில் ஜூனியர் ஆர்டிஸ்டாகவே அவர் நடித்தார்.
இப்போதோ தமிழ் மட்டுமின்றி பல மொழிப்படங்களிலும் கலக்கி வருகிறார். நடிகை திரிஷாவை 'கோலிவுட் குயின்'னு சொல்வாங்க. ஒரு டாப் ஹீரோ பற்றிய சுவையான சம்பவத்தைத் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
2019ல் ரஜினியுடன் பேட்ட படத்தில் நடித்தார். அதன்பிறகு 2 வருடங்களாகப் படத்தில் நடிக்கவில்லை. ஒதுங்கியே இருந்தார். ஆனால் திடீருன்னு பார்த்தா அவருக்கு ஒரு உத்வேகம் வநது மீண்டும் பழையபடி வேகம் வேகமாக படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார். கடைசியாக விஜய்க்கு ஜோடியாக லியோ படத்தில் நடித்து அசத்தினார்.
தற்போது த்ரிஷா விஸ்வம்பரா என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். அதில் முக்கிய வேடத்தில் மெகா ஸ்டார் சிர ஞ்சீவியும் நடிக்கிறார். பல வருடங்களுக்குப் பிறகு சிரஞ்சீவியுடன் த்ரிஷா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே நேரத்தில் நான்கு படங்களுக்கும் மேல் அங்கு நடித்து வருகிறார். இந்தப் படத்தின்போது நடந்த ஒரு விஷயத்தைத் தற்போது பகிர்ந்துள்ளார்.
மெகா ஸ்டார் சிரஞ்சீவி தினமும் படப்பிடிப்புக்கு வரும்போது விதவிதமான உணவுகளைக் கொண்டு வந்து பரிமாறுவாராம். அதுமட்டுமல்ல. நல்ல சாப்பாடா கொடுத்து கொடுத்து அவரது டயட்டையும் கெடுத்து விட்டாராம். நடிகர் சிரஞ்சீவி ஒரு சாப்பாட்டுப் பிரியர் தான். அதற்காக ஒல்லிக்குச்சி உடம்புக்காரியை இப்படியா பண்ணுவீங்க என்று சொல்லத் தோன்றுகிறது அல்லவா..!
தமிழில் தல அஜீத்துடன் விடாமுயற்சி படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார். மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன் ஜி, கிரீடம், என்னை அறிந்தால், மங்காத்தா ஆகிய படங்களில் அஜீத்துடன் த்ரிஷா இணைந்து நடித்துள்ளார்.