ரத்தம் சொட்ட சொட்ட நடித்த எம்.ஆர்.ராதா!.. வாக்கு கொடுத்தா மனுஷன் இப்படி மாறிடுவாராம்!..

mr radha
60களில் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக இருந்தவர் எம்.ஆர்.ராதா. ஹீரோ, வில்லன், குணச்சித்திரம், காமெடி என அனைத்து கதாபாத்திரங்களிலும் கலக்கியவர் இவர். இவருக்கென தனி ரசிகர் கூட்டமே இருந்தது. கரகரப்பான குரல், நக்கலாக பேசி நடிக்கும் ஸ்டைல், சகுணித்தனம் என அசத்தல் வில்லனாக வலம் வந்தவர் இவர்.
துவக்கத்தில் நாடகங்களில் நடித்து வந்த எம்.ஆர்.ராதா ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிக்க துவங்கினார். ‘ரத்தக் கண்ணீர்’ திரைப்படம் இவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. இப்போது கூட இந்த படம் தொடர்பான வீடியோக்களை பலரும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: எம்.ஆர்.ராதா நடிப்பு சரியில்ல!.. போட்டு உடைத்த இயக்குனர்!.. நடிகவேள் செஞ்சதுதான் ஹைலைட்!..
நடிப்பு என வந்துவிட்டால் நடிகர் எம்.ஆர்.ராதா எவ்வளவு சின்சியராக இருப்பார்.. அவருக்குள் எவ்வளவு நல்ல குணம் உண்டு என்பது பலருக்கும் தெரியாது. சினிமாவில் நடித்துகொண்டே நாடகங்களிலும் நடித்து வந்தார் எம்.ஆர்.ஆர். ஒருமுறை திருக்கோவிலூரில் நடந்த நாடகத்தில் நடிக்க ஒப்புகொண்டார். அது அவரின் ஃபேவரைட் ‘ரத்தக் கண்ணீர்’ நாடகம். அந்த நாடகத்தில் வரும் வருமானத்தை நலிந்த நாடக கலைஞர்களுக்கு கொடுப்பதாக இருந்தது.
ஆனால், நாடகம் நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு தொடையில் ஒரு கட்டி வரவே அதை நீக்கி அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. எனவே, எம்.ஆர்.ராதா காலில் கட்டு போட்டிருந்தார். நாடகம் துவங்கும் நாளில் எம்.ஆர்.ராதாவுக்கு இப்படி ஆகிவிட்டதே என நாடகத்தை ஏற்பாடு செய்தவர்கள் கலங்கி போனார்கள்.
இதையும் படிங்க: வீட்டில் சண்டை போட்டு.. வித்-அவுட் ரயிலில் போய் நடிகனான எம்.ஆர்.ராதா!.. பிளாஷ்பேக் செமயா இருக்கே!..
பலர் சொல்லியும் கேட்காமல் அந்த நாடகத்தில் நடித்தே தீருவேன் என சென்னையிலிருந்து காரில் அங்கு சென்றார் எம்.ஆர்.ராதா. எம்.ஆர்.ராதா வருகிறார் என தெரிந்ததும் கூட்டம் அங்கே களைகட்டியது. தொடையிலோ வலி. ஆனால், அதையும் பொருட்படுத்தாமல் ‘நடித்தே தீருவேன்’ என்றார் எம்.ஆர்.ராதா. அவரால் மேடையில் ஏறகூட முடியவில்லை. இரண்டு பேர் கைத்தாங்கலாக அவரை ஏற்றிவிட்டனர்.
அவர் நடிக்க துவங்க ஒவ்வொரு அசைவிலும் காலில் ரத்தம் கசிய துவங்கியது. எவ்வளவு பஞ்சு வைத்து கட்டியும் ரத்தம் நிற்கவில்லை. ஆனால்,அதையெல்லாம் பொறுத்துக்கொண்டே அந்த நாடகத்தில் நடித்து முடித்தார் எம்.ஆர்.ராதா. ரத்தக்கண்ணீர் நாடகம் அன்று உண்மையிலேயே ரத்தம் சொட்ட சொட்ட முடிந்தது.