எம்ஆர்.ராதா எம்ஜிஆரை சுட்டது எதுக்கு? எல்லாப் பிரச்சனைக்கும் இந்த கருமம்தான் காரணமா?

mr radha mgr
எம்ஜிஆரின் 30க்கும் மேற்பட்ட படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் துரைராஜ். எம்ஜிஆரின் பல படங்களில் இயக்குனராக வந்தவர் ப.நீலகண்டன். இவருடன் இணைந்து பல படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றியுள்ளார் துரைராஜ். இவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் எம்ஜிஆரை எம்ஆர்.ராதா எதற்காக சுட்டார் என்ற தகவலை சொல்கிறார். வாங்க பார்க்கலாம்.
பெற்றால்தான் பிள்ளையா படத் தயாரிப்பாளருக்கு 2 லட்ச ரூபாய் வட்டிக்குக் கொடுத்தான். 1 லட்ச ரூபாய் வந்தது. 1 லட்ச ரூபாய் வரல. அதனால அவரை எம்ஆர்.ராதா மிரட்டினான். ஏன்டா அவரை மிரட்டுற. பணம் வந்துடும். பயப்படாதேன்னு ஆறுதல் சொன்னார் எம்ஜிஆர். அது தப்பாகிப் போச்சு.
நாலஞ்சித் தடவை கேட்டும் ஒண்ணும் வரல. உடனே ரிவால்வர எடுத்தாரு. 15 வருஷத்துக்கு முன்னாடி வாங்குன குண்டை போட்டாரு. வந்து எம்ஜிஆருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 'நீதானே பணத்தை நான் கொடுக்குறேன்னு சொன்னே'. 'நீ அவருக்கிட்ட மெல்ல வாங்கிக்க'ன்னு பேச, 'அதெல்லாம் சரியா வராது'ன்னு எம்ஜிஆர் சொல்ல ரிவால்வரை எடுத்து டப்புன்னு சுட்டுட்டாரு எம்ஆர்.ராதா. ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்குப் போனோம். எம்ஜிஆர் நீங்காப்புகழைப் பெற காரணம் அவர் செஞ்ச தான தர்மங்கள்தான். அதைக் கணக்குப் போட முடியுமா என்று கேட்கிறார் இயக்குனர் துரைராஜ்.
1966ல் கே.கே.வாசு தயாரிப்பில் எம்ஜிஆர், சரோஜா தேவி நடிப்பில் வெளியான படம் பெற்றால் தான் பிள்ளையா. கிருஷ்ணன் பஞ்சு இயக்கியுள்ளனர். எம்.ஆர்.ராதா இந்தப் படத்தில் கபாலியாக நடித்துள்ளார். தங்கவேலு, நம்பியார், டிஎஸ்.பாலையா உள்பட பலரும் நடித்துள்ளனர்.
படத்தின் திரைக்கதையை ஆரூர்தாஸ் எழுதினார். எம்எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார். படத்தில் சக்கரக்கட்டி என் சீமாட்டி, செல்லக்கிளியே மெல்லப் பேசு, கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான், நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி ஆகிய சூப்பர்ஹிட் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
எம்ஆர்.ராதாவின் மகன் ராதாரவி இதுபற்றி கூறுகையில் தயாரிப்பாளர் வாசு எம்ஜிஆரின் நெருங்கிய நண்பர். அவர் தான் என் அப்பாவிடம் 1லட்சம் பணத்தைக் கேட்டார். எம்ஜிஆரின் கால்ஷீட்டையும் கேட்டுப் பெற்றுக் கொண்டார் என்கிறார். அதே போல அப்பாவுக்கு அந்த பெற்றால்தான் பிள்ளையா 100வது படம் என்றும் தெரிவித்துள்ளார்.