எம்.ஆர்.ராதா செய்த டார்ச்சர்.. பதிலுக்கு நடிகை செய்த வேற லெவல் சம்பவம்

by Rohini |
mr radha
X

mr radha

1960களில் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி இவர்கள்தான் இந்த தமிழ் சினிமாவை கட்டி காத்து வந்தனர். ஆனால் அவர்களுக்கு இணையாக போற்றப்பட்ட நடிகராக இருந்தவர் எம்.ஆர்.ராதா. தன்னுடைய கணீர் குரலாலும் கருத்து பேச்சாலும் அனைவரையும் வெகுவாக கவர்ந்தவர். பொதுவுடைமை கருத்துக்களை பெரும்பாலும் பேசக்கூடியவர் எம்.ஆர்.ராதா. பெரியாரின் கொள்கையை தீவிரமாக பின்பற்றக் கூடியவர்.

கடவுள் நம்பிக்கை இல்லாதவர். மூட நம்பிக்கையிலும் நம்பிக்கை இல்லாதவர். தம் மனதிற்கு எது படுகிறதோ அதை பேசக் கூடியவர். அதை செய்யக் கூடியவர். சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் சில படங்களில் வில்லனாகவும் நடித்து வந்தார். சிவாஜிக்கு மிகவும் பிடித்தமான நடிகரும் கூட. ஒரு சமயம் சிவாஜியே ‘ நான் கூட சேர்ந்து நடிக்க பயன்படும் நடிகர் எம்.ஆர்.ராதா’ என்று கூறியிருப்பார்.

சிவாஜிக்கு இணையான நடிப்பை வழங்குவதில் சிறந்த கலைஞர் எம்.ஆர்.ராதா. வெள்ளித்திரையில் புகழ் பெறுவதற்கு முன்னரே நாடக மேடையில் தோன்றி பிரபலமடைந்தார். சினிமாவில் அவருக்கு என ஒரு தனி மரியாதையே இன்று வரை இருக்கிறது. அதை போல் நிஜ வாழ்க்கையிலும் எம்.ஆர் ராதா ஐந்து மனைவிகளுடன் வாழ்ந்தவர் என ராதாரவியே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: நாக சைதன்யா 2-வது திருமணம்… சமந்தா என்ன சொல்லி இருக்காங்க பாருங்க!

எந்த ஊரில் நாடகம் போட்டாலும் அங்கு ஒரு பெண்ணை திருமணம் செய்து விடுவார் என் அப்பா என்று கூறியிருந்தார். இந்த நிலையில் ஒரு நடிகைக்கு எம்.ஆர்.ராதா கொடுத்த டார்ச்சர் பற்றிய சம்பவம் தான் இந்த செய்தியில் பார்க்க இருக்கிறோம். குணச்சித்திர நடிகையாகவும் வில்லியாகவும் பல படங்களில் நடித்தவர் எம்.என்.ராஜம். இரத்தக்கண்ணீர் படத்தில் எம்.ஆர்.ராதாவுக்கு ஜோடியாக ராஜம் நடித்திருப்பார்.

rajam

rajam

அப்போது ராஜத்திற்கு 14 வயதுதானாம். இருந்தாலும் எம்.ஆர்.ராதாவுக்கு ஜோடியாக துணிந்து அந்தப் படத்தில் நடித்தார். அந்த காலத்தில் பெண் பித்தராக வலம் வந்த எம்.ஆர்.ராதாவுக்கு ராஜத்தை தன் வலையில் வீழ்த்த வேண்டும் என்று எண்ணி அவரை பல முறை டார்ச்சர் செய்ததும் உண்டாம். இதனால் ராஜத்தின் அம்மாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லையாம்.

இதையும் படிங்க: அப்பா பெருமைப்படுவாரு!.. மினி கூப்பர் காரை பரிசாக வழங்கி.. பாசமழையை பொழிந்த எஸ்.கே..

அந்தப் படத்தின் ஒரு காட்சியில் மாடிப் படியிலிருந்து எம்.ஆர்.ராதாவை ராஜம் தள்ளி விட வேண்டும். தன்னை பல முறை டார்ச்சர் செய்ததற்காக இதை சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கலாம் ராஜம். ஆனால் எப்பேற்பட்ட நடிகர் அவர்? அவரை நான் தள்ளிவிடுவதா என நினைத்து நடிக்க மாட்டேன் என சொல்லியிருக்கிறார். அதன் பிறகு எம்.ஆர்.ராதா ‘இந்த காட்சி தத்ரூபமாக இருக்க வேண்டும். அதனால் தள்ளிவிடு’ என சொல்ல அதன் பிறகுதான் எம்.ஆர்.ராதாவை மாடிப்படியிலிருந்து தள்ளிவிட்டாராம் ராஜம்.

Next Story