அந்த 3 பேர் இறந்தப்ப அம்மா இறந்த மாதிரி அழுதார் எம்.எஸ்.வி.. யார் யார்னு தெரியுமா?

by Rajkumar |   ( Updated:2023-06-22 07:01:17  )
msv
X

msv

தமிழ் சினிமாவில் இளையராஜாவிற்கு முன்பு பெரும் இசையமைப்பாளராக இருந்தவர் எம்.எஸ் விஸ்வநாதன். எம்.ஜிஆ.ர் சிவாஜி கணேசனில் துவங்கி தமிழ் சினிமாவில் அப்போது இருந்த பெரும் நட்சத்திரங்கள் பலரின் படங்களுக்கு எம்.எஸ்.விதான் இசையமைத்தார். மக்கள் மத்தியில் எம்.எஸ்.வி இசைக்கு பெரும் ஆதரவு இருந்தது.

எனவே தொடர்ந்து தங்களது திரைப்படங்களில் எம்.எஸ்.விதான் இசையமைக்க வேண்டும் என்று பிரபலங்களும் நினைத்தனர். அதனால் அப்போது அதிக வாய்ப்பை பெற்ற இசையமைப்பாளராக எம்.எஸ்.வி இருந்தார்.

msv

msv

எம்.எஸ்.வி இசையமைப்பாளராக இருந்த சமகாலத்தில் பாடலாசிரியர்களில் பெரும் வரவேற்பை பெற்றவராக கவிஞர் கண்ணதாசன் இருந்தார். கவிஞர் கண்ணதாசனுக்கும் எம்.எஸ்.விக்கும் நெருங்கிய நட்பு இருந்தது. பல பேட்டிகளில் எம்.எஸ்.வி கண்ணதாசனை குறித்து நிறைய பேசியுள்ளார்.

கண்ணீர் வடித்த எம்.எஸ்.வி:

அப்போது தமிழ் சினிமாவில் சில பிரபலங்களுடன் ஆழமான நட்பில் இருந்தார். கண்ணதாசனின் இறப்பு அவருக்கு ஈடு செய்ய முடியாததாக இருந்தது. ஒரு பேட்டியில் இதுக்குறித்து எம்.எஸ்.வின் மகன் கூறும் பொழுது தனது அம்மா இறந்த பொழுதுதான் எம்.எஸ்.வி மிக அதிகமாக அழுதார் பெரும் இழப்புக்கு உள்ளானார். அதேபோல சினிமாவில் முக்கியமான மூன்று நட்சத்திரங்கள் இறந்த பொழுது கண்ணீர் வடித்தார் எனக் கூறியுள்ளார்.

kannadasan

அதில் முதலாவதாக கண்ணதாசனைதான் கூற வேண்டும். கண்ணதாசன் எம்.எஸ்.விக்கும் மிக நெருங்கிய நட்பு இருந்தது. அதனால் அவருடைய இழப்பை எம்.எஸ்.வியால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அதேபோல மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் இறந்த பொழுது அதையும் எம்.எஸ்.வியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இத்தனைக்கும் எம்.ஜி.ஆர், எம்.எஸ்.வியை அவரது முதல் படத்திலேயே நிராகரித்தார். இருந்தாலும் அதற்குப் பிறகு அவர்களுக்குள் ஆழமான நட்பு உருவானது. மூன்றாவதாக சிவாஜி கணேசன், சிவாஜி கணேசனுடன் எம்.எஸ்.விக்கு நல்ல நட்பு இருந்தது. அவருடைய இழப்பையும் எம்.எஸ்.வியால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை என்று அவரது மகன் பேட்டியில் கூறியுள்ளார்.

Next Story