அஜித் படத்தில் நடிக்க எம்.எஸ்.வி போட்ட 2 கண்டிஷன்கள்.. செம கில்லாடிதான்!..

திரையிலகில் பல மெல்லிசை பாடல்களை கொடுத்தவர் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன். பல பாடல்களை பாடியும் இருக்கிறார். கருப்பு வெள்ளை காலம் முதல் கலர் சினிமாவரை பல திரைப்படங்களுக்கும் இவர் இசையமைத்துள்ளார். எம்.ஜி.ஆர், சிவாஜி நடித்த பெரும்பாலான படங்களுக்கும் இவர்தான் இசையமைத்தார். இவரும் ராமமூர்த்தியும் இணைந்து பல வெற்றிப்பாடல்களை கொடுத்துள்ளனர்.

MSV

இவரை சில இயக்குனர்கள் தங்களின் திரைப்படங்களில் நடிக்க வைத்துள்ளனர். ஆனால் அவை சில காட்சிகள் மட்டுமே. ஏனெனில், விஸ்வநாதனுக்கு நடிப்பதில் ஆர்வம் கொஞ்சமும் கிடையாது. இவரை இயக்குனர் சரண் தான் இயக்கிய ‘காதல் மன்னன்’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்தார். இப்படத்தில் நடிகர் விவேக் நடித்ததோடு மட்டுமில்லாமல் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்தார்.

kadhal mannan

kadhal mannan

எனவே, சரணும், விவேக்கும் சேர்ந்து எம்.எஸ்.விஸ்நாதனை நேரில் சந்தித்து இப்படத்தில் நடிக்க வற்புறுத்தினர். ஆனால், அவர் ஒத்துக்கொள்ளவே இல்லையாம். ஆனாலும், இருவரும் விடாமல் அவரை சந்தித்து பேச அப்படத்தில் நடிக்க எம்.எஸ்.விஸ்வநாதன் இரண்டு கண்டிஷன்களை போட்டாராம். ஒன்று இந்த படத்தில் எனக்கு ரூ.10 லட்சம் சம்பளம் வேண்டும். அதில் ரூ.,5 லட்சத்தை ராமமூர்த்தியிடம் கொடுக்க வேண்டும். அதேபோல், இந்த படத்தில் நான் ஒரு பாடலையும் கம்போஸ் செய்வேன்’ என சொன்னாராம்.

இதற்கு இருவரும் ஒத்துக்கொண்டனர். அப்படத்தில் இடம் பெற்ற ‘மெட்டு தேடி தவிக்குது ஒரு பாட்டு’ பாடலை அவரே கம்போஸ் செய்து பாடியும் இருப்பார். இந்த திரைப்படத்தில் மெஸ் விஸ்வாநாதன் என்கிற கதாபாத்திரத்தில் அவர் நடித்திருப்பார். இவர் நடத்தும் மெஸ்ஸில்தான் அஜித்தும், விவேக்கும் சாப்பிடுவது போலவும், அஜித்து துணிச்சல் வரவைத்து அவரின் காதலை வெற்றிபெற வைக்கும் கதாபாத்திரத்தில் அசத்தி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இத்தனை திரைப்படங்களா?.. இதெல்லாம் லிஸ்ட்லயே இல்லையே?..சிவாஜி ரஜினி இணைந்து நடித்த படங்கள்!..

 

Related Articles

Next Story