Connect with us
vaali

Cinema History

அவர் மேல எந்த தப்பும் இல்ல!.. நான்தான் காரணம்!.. வாலிக்காக பழியை ஏற்றுகொண்ட எம்.எஸ்.வி..

Anbe va: 50,60களில் திரைப்படத்துறையில் இருந்த கலைஞர்களில் பலரும் நேர்மையானவர்களாக, பொறாமை குணம் இல்லாதவர்களாக, மனசாட்சி உள்ளவர்களாக நடந்து கொண்டார்கள். அதனால்தான் அப்போது சினிமா என்பது நல்ல முன்னேற்றத்தை கண்டது. பல புதிய இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் உருவானார்கள்.

குறிப்பாக எந்த சிக்கலும் இன்றி படங்களும் வெளியானது. திரைப்படத்துறையில் இசை ஜாம்பவானாக இருந்தவர்தான் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், முத்துராமன் என அப்போதைய பெரிய ஹீரோக்களின் பல திரைப்படங்களில் இசையமைத்தவர் இவர்தான்.

இதையும் படிங்க: பாட்டில் தப்பு இருக்கே… விடாப்பிடியாக சொன்ன எம்.ஜி.ஆர்… வாலி என்ன செய்தார் தெரியுமா?

எஸ்.எம்.சுப்பையா நாயுடு, கே.வி.மகாதேவன் என இசையமைப்பாளர்கள் இருந்தாலும் 50 முதல் 70 வரை அதிக திரைப்படங்களுக்கு எம்.எஸ்.வி இசையமைத்தவர் . ராமமூர்த்தியோடு இணைந்து விஸ்வநாதன் – ராமூர்த்தி பெயரில் பல பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்தது. இப்போதும் 60 கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த இசை இவர்களின் இசைதான்.

எம்.எஸ்.வி-யின் பாடல்கள் காலம் கடந்தும் நிற்பவையாக இருக்கிறது. எம்.எஸ்.வியின் இசையில் பல பாடல்களை கவிஞர் வாலி எழுதியிருக்கிறார். குறிப்பாக எம்.ஜி.ஆர் – எம்.எஸ்.வி – வாலி கூட்டணியில் பல பாடல்கள் ரசிகர்களை ரசிக்க வைத்தது. அப்படி ‘ அன்பே வா’ படத்தில் உருவான ஒரு சம்பவம் பற்றித்தான் இங்கே பார்க்க போகிறோம்.

இதையும் படிங்க: ஹீரோ பெயரை பாடல் வரிகளில் சொருகிய வாலி!.. இதுல செம கில்லாடி அவருதான்!..

ஏவிஎம் தயாரிப்பில் எம்.ஜி.ஆர் நடித்த படம்தான் ‘அன்பே வா’. இந்த படத்திற்காக ஒரு பாடலை கம்போஸ் செய்து கொண்டிருந்தார் எம்.எஸ்.வி. ஆனால், பலமுறை முயன்றும் வாலியால் அந்த டியூனுக்கு பாடல் வரிகளை எழுத முடியவில்லை. வாலியும் எப்படியும் பாடலை எழுதி கொடுத்துவிடுவார் என்ற நம்பிக்கையில் பாடலை ஒலிப்பதிவு செய்வதற்காக இசைக்கலைஞர்களையும் வரவழைத்து விட்டனர்.

ஆனால், வாலியால் பாடலை எழுத முடியவில்லை. எனவே, இசைக்கலைஞர்களுக்கு வெட்டியாக சம்பளம் கொடுக்க வேண்டியதாயிற்று. இதில், கோபமடைந்த ஏவிஎம் சரவணன் ‘என்ன வாலி இப்படி பண்ணிட்டீங்க’ என சலித்துகொண்டாராம். அப்போது எம்.எஸ்.வி ‘வாலியின் மீது எந்த தவறும் இல்லை. இந்த டியூனில் வார்த்தைகள் உட்காரவில்லை. டியூன் கடினமாக இருக்கிறது. ஒரு டியூனுக்கு 10 பல்லவிகளை சொல்லும் வாலியால் பாடல் எழுத முடியுதா?.. நாளை கண்டிப்பாக இந்த பாடல் முடிந்துவிடும்’ என பழியை அவர் ஏற்றுக்கொண்டார்.

அவர் சொன்னதுபோலவே அடுத்த நாள் உருவான பாடல்தான் ‘அன்பே வா.. அன்பே வா.. உள்ளம் என்றொரு கோவிலிலே தெய்வம் வேண்டும் அன்பே வா’. இந்த பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உன்ன பாத்து மொத்த கண்ட்ரோலும் போச்சி!.. வாலிப பசங்க மனச கெடுக்கும் ஜான்வி..

google news
Continue Reading

More in Cinema History

To Top