மரண தருவாயில் இருந்தவரின் உயிரை மீட்ட எம்.எஸ்.வி பாடல்கள்!. இதெல்லாம் வெளியவே வரலயே!...
மனிதனால் கண்டறியப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட பல விஷயங்களில் இசை முக்கியமானது. இசையால் பல அதிசயங்கள் நிகழும். இசை மனதுக்கு சிகிச்சை அளிக்கும். மன உளைச்சலை போக்கும். மன காயங்களுக்கு மருந்து போடும். ஒருவரை ஆறுதல் படுத்தும். சோர்ந்து கிடப்பவருக்கு உத்வேகம் கொடுக்கும். ஆட வைக்கும்.
அதனால்தான் இசையை எல்லோரும் விரும்புகிறார்கள். இசையை வெறுப்பவர் என ஒருவர் இந்த உலகத்தில் இருக்கவே முடியாது. இளையராஜாவின் இசை இன்னமும் பலரின் மன வேதனைகளுக்கு மருந்து போட்டு வருகிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு குறுகிய நாட்களில் மரணமடையவிருந்த ஒரு ரசிகர் இளையராஜாவிடம் ‘உங்கள் இசையால் மட்டுமே நான் உயிர் வாழ்ந்து வருகிறேன்’ என்று சொன்ன சம்பவமும் ஒருமுறை நடந்தது.
இதையும் படிங்க: எம்.எஸ்.விக்கே பிடிக்காத பாடல்!.. நம்பிக்கை சொன்ன கண்ணதாசன்!.. அட அந்த சூப்பர் ஹிட் பாட்டா?!..
இசையின் சக்தி அதுதான். திரைப்படங்களில் இசை முக்கிய பங்கு வகிக்கிறது. சினிமா துவங்கியது முதலே பாடல்கள் காட்சிகள் இருந்து வருகிறது. 1930 லிருந்து இப்போது வரை இது தொடர்ந்து வருகிறது. மேலும், ஒரு காட்சியின் உணர்வை ரசிகர்களுக்கு பின்னணி இசையே கடத்துகிறது.
60களில் தமிழ் சினிமாவில் மெல்லிசை பாடல்களை கொடுத்தவர் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன். பல அற்புதமான மெலடி பாடல்களை அவர் கொடுத்திருந்தார். ராமமூர்த்தியுடன் இணைந்தும், தனியாகவும் பல நூறு படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் இவர்.
இதையும் படிங்க: கண்ணதாசன் அழைத்தும் போகாத எம்.எஸ்.வி!… சந்திக்கவே முடியாமல் போன சோகம்!.. அட பாவமே!..
ஊடகம் ஒன்றில் பேசும்போது ‘இசை அனைத்தையும் ஆட வைக்கும். அதுபோல ஒரு சம்பவம் என் வாழ்வில் நடந்திருக்கிறது. என் நண்பர் ஒருவர் ஒரு விபத்தில் சிக்கி சீரியஸான நிலைக்கு போய்விட்டார். அவரை காப்பாற்ற முடியாது. அவருக்கு பிடித்ததை செய்யுங்கள் என சொல்லிவிட்டனர். அவருக்கு இசையின் மீது அதிக விருப்பம் உண்டு. எனவே, எனது பாடல்களை அவர் இருந்த அறையில் ஒலிக்க விட்டனர்.
2வது நாளும் என் பாடல்கள் அவரின் அறையில் ஒலித்துக்கொண்டே இருந்தது. 3வது நாளில் கண் விழித்த அவர் ’சட்டி சுட்டதடா கை விட்டதடா’ பாடல் இன்னும் வரவே இல்லையே என்று கேட்டிருக்கிறார். இசை எல்லாவற்றையும் செய்யும். இசை கேட்டால் புவி அசைந்தாடும் என்பது உண்மைதான்’ என அவர் சொல்லி இருக்கிறார்.