Connect with us
கண்ணதாசன்_எம்.எஸ்.வி

Cinema History

பாட்டு எப்படி எழுதனும்ணு எனக்கு நீ சொல்லிதரியா?…எம்.எஸ்.வியிடம் சீறிய கண்ணதாசன்….

தமிழ் திரையுலகில் முக்கிய அங்கமாக இருந்த இரு பிரபலங்களான எம்.எஸ்.விஸ்வநாதன் கவிஞர் கண்ணதாசன் ஆகியோர் அடிக்கடி முட்டிக்கொள்வதையே வாடிக்கையாக வைத்திருந்தனராம்.

ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தில் இருந்த அனைத்து இசையமைப்பாளர்களுக்கு தேவையான மெட்டை கவிஞர்களிடம் வாசித்துக் காட்டி பாடல் வரிகளை எழுதி வாங்குகின்ற வேலை எம்.எஸ்.விஸ்வநாதன் உடையது தானாம். ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான கன்னியின் காதலி திரைப்படத்தில் தான் கண்ணதாசன் பாடலாசிரியராக அறிமுகமானார்.

கண்ணதாசன்_எம்.எஸ்.வி

கண்ணதாசன்_எம்.எஸ்.வி

அப்படத்தின் ஒரு பாடல் வரிகளுக்கு தான் கண்ணதாசன் மற்றும் எம்.எஸ்.வி இடையே முட்டிக்கொண்ட சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்து இருக்கிறது. பாடலுக்கான மெட்டை விஸ்வநாதன் வாசித்தார். சற்று நேரம் யோசித்த கண்ணதாசன் “காரணம் தெரியாமல் உள்ளம் களி கொண்டு கூத்தாடுதே” என்று எழுதி கொடுத்தார். இதை வாங்கி படித்த எம்.எஸ்.வி என்னப்பா இது ‘களி’, ‘கூத்து’ னுலாம் எழுதி இருக்க, நல்லாவே இல்லை. மாற்று என்றாராம்.

இதையும் படிங்க: கண்ணதாசன் பாடலையே நிராகரித்த பிரபல நடிகை… கவியரசரை கூனி குறுக வைத்த சம்பவம்..

இதை கேட்ட கண்ணதாசனுக்கு கடும் கோபம் ஏற்பட்டது. “நீயெல்லாம் எப்படி பாட்டை எழுதவேண்டுமென்று எனக்கு சொல்லித் தருகிறாயா?” என்றதுடன் முறைக்கவும் செய்திருக்கிறார். ஆனால், எம்.எஸ்.வி இதை கொஞ்சம் கூட சட்டை செய்யவில்லை. மாற்று என்ற ரீதியில் அவரும் கண்ணதாசனை பார்த்தாராம். அந்த நேரம் பார்த்து ஜுபிடர் பிக்சர்சில் ஆஸ்தான கவிஞராக இருந்த உடுமலை நாராயணகவி அங்கு வந்தார்.

கண்ணதாசன்_எம்.எஸ்.வி

கண்ணதாசன்_எம்.எஸ்.வி

இந்த விஷயத்தினை அறிந்தார். காரணம் தெரியாமல் உள்ளம் சந்தோஷம் கொண்டாடுதேன்னு போட்டு எழுதிக்கோ என மாற்றினாராம். அவர் சொன்ன வார்த்தைகள் எம்.எஸ்.வி பிடித்து போனது. உடனே ஓகே சொல்லி விட்டார். ஆனால் அவருக்கு நாராயணகவி ஒரு பல்பையும் சேர்த்தே கொடுத்தாராம். களி கொண்டு கூத்தாடுதே என்ற வார்த்தைகள் கவிதை நயமிக்க அழகான வார்த்தைகள். இந்த மடையன் விஸ்வநாதனுக்கு புரியாது. அவனை மாதிரி இருக்கிற மடையங்களுக்குத்தானே இந்தப் பாட்டு. அதனால அவங்களுக்குப் புரியணும்கிறதுக்காகத்தான் அதை மாத்தி கேட்கிறான் எனக் கூறி சென்றாராம். இப்படி சண்டையும் வம்புமாக சென்றதாம் அவர்களின் முதல் சந்திப்பு.

google news
Continue Reading

More in Cinema History

To Top