Cinema History
இப்படி பாடினா பல்லை உடைச்சிடுவேன்!. எஸ்.பி.பியை திட்டிய எம்.எஸ்.வி!.. நடந்தது இதுதான்!…
பல இனிமையான பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ஆந்திராவை சேர்ந்த இவர் ஒரு கல்லூரி விழாவில் பாடுவதை கேட்டுவிட்டு ‘நீ சினிமாவில் பாடு’ என என்கரேஜ் செய்தவர் பின்னணி பாடகி எஸ்.ஜானகி.
அதன்பின் சென்னை வந்து வாய்ப்புகள் தேடினார். இவர் முதலில் வாய்ப்பு கேட்டது. இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம்தான். ‘குரல் இன்னும் உடையவில்லை. சின்ன பையன் போல இருக்கிறது. அதோடு, தமிழை நன்றாக கற்றுக்கொண்டு சில வருடங்கள் கழித்து வா’ என சொல்லி அனுப்பிவிட்டார்.
இதையும் படிங்க: அந்த விஷயத்தில் எஸ்.பி.பி. ரொம்பவே சூப்பர்… பாடகி சித்ரா கொடுக்கும் சர்டிபிகேட் இதுதான்..!
அதன்பின் பல முயற்சிகள் மற்றும் பயிற்சிகளை மேற்கொண்டார். எஸ்.பி.பியை எம்.ஜி.ஆருக்கு பிடித்துப்போனது. அடிமைப்பெண் படத்தில் அவருக்கு ஒரு பாடல் கொடுத்தார். அதுதான் ‘ஆயிரம் நிலவே வா’ பாடல். அப்படியே ஜெமினி கணேசன், சிவாஜி என சில நடிகர்களுக்கு பாடினார் எஸ்.பி.பி.
ஒருகட்டத்தில் எம்.எஸ்.விக்கு எஸ்.பி.பி-யின் குரல் மிகவும் பிடித்துப்போக தொடர்ந்து அவரை பாட வைத்தார். ஏனெனில் அப்போது டி.எம்.எஸ் ஏறக்குறைய ரிட்டயர்ட் ஆகும் நிலையில் இருந்தார். அதோடு, எஸ்.பி.பி, யேசுதாஸ், மலேசியா வாசுதேவன் போன்ற புதிய பாடகர்கள் வந்திருந்தார்கள்.
இதையும் படிங்க: எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!…
‘முத்தான முத்தல்லவோ’ என்கிற படத்தில் ‘எனக்கொரு காதலி இருக்கின்றாள். அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்’ என்கிற பாடலை உருவாக்கினார் எம்.எஸ்.வி. இதில், தேங்காய் சீனிவாசனுக்கு எம்.எஸ்.வியூம், ஜெய் கணேஷுக்கு எஸ்.பி.பியும் பாடினார்கள். இந்த பாடலை எப்படி பாட வேண்டும் என எஸ்.பி.பிக்கு எம்.எஸ்.வி சொல்லி கொடுத்தார்.
ஆனால் பாடல் பதிவின்போது குரலை கொஞ்சம் ஏற்றிப்பாடினார் எஸ்.பி.பி. உடனே எம்.எஸ்.வி ‘நான்தான் இசையமைப்பாளர். நான் சொல்றபடிதான் நீ பாட வேண்டும். என்னிடம் வாய்ப்பு கேட்டு வந்த நீ அடக்கித்தான் வாசிக்க வேண்டும். என்னை ஓவர் டேக் செய்தால் உன் பல்லை உடைத்துவிடுவேன்’ என விளையாட்டாக திட்டியிருக்கிறார். அதன்பின் அவர் சொன்னபடியே பாடி முடித்தார் எஸ்.பி.பி.