ரெக்கார்டிங் தியேட்டரில் ஆன் தி ஸ்பாட்டில் டியூனை மாற்றிய எம்.எஸ்.வி.. அந்த சூப்பர் ஹிட் பாட்டா!...

50,60களில் திரையுலகில் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் என எல்லோருமே ஜாம்பாவானாக இருந்தார்கள். அதனால்தான் அவர்களின் சாதனைகளை இப்போதும் பலராலும் பேசப்பட்டு வருகிறது. எம்.ஜி.ஆர், சிவாஜியின் படங்களும், பாடல்களும், கண்ணதாசனின் வரிகளும், எம்.எஸ்.வியின் இசையும் இப்போதும் பலராலும் சிலாகித்து பாராட்டப்படுகிறது.

இப்போதுள்ள ஒரு இசையமைப்பாளர்களிடம் ஒரு பாடலை வாங்குவது எனில் அது அவ்வளவு சுலபம் இல்லை. சில இசையமைப்பாளார்கள் எனக்கு வெளிநாடு சென்றால்தான் ட்யூன் வரும் என்பார். தயாரிப்பாளர் அவருக்கு விமான டிக்கெட் முதல் அங்கு அவர் தங்கும் அறை வரை எல்லா செலவையும் செய்ய வேண்டும். ஒருவர் எனக்கு நட்சத்திர ஹோட்டலில் ஷூட் ரூம் போட்டு கொடுங்கள் என்பார். அதற்கு பல லட்சம் செலவாகும்.

இதையும் படிங்க: கடனில் சிக்கிய சிவாஜி பட இயக்குனர்!.. கை கொடுத்து தூக்கிவிட்ட எம்.ஜி.ஆர்!.. அட அந்த படமா?!..

இப்போது இதுதான் நடந்து வருகிறது. ஆனால், எம்.எஸ்.வி - ராமமூர்த்தி காலத்தில் இப்படியெல்லாம் இல்லை. எம்,எஸ்.வி அமர்ந்த இடத்தில் ட்யூன் போட்டால் கவிஞர் கண்ணதாசன் உடனே வரிகளை சொல்லிவிடுவார். உடனே பாடல் பதிவும் நடந்து முடிந்துவிடும். எம்.ஜி.ஆரின் நடிப்பில் உருவான ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இடம்பெற்ற ‘ஏன் என்ற கேள்வி’ பாடல் கூட, மைசூரில் அப்பட படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோதே தொலைப்பேசியில் எம்.ஜி.ஆர் இப்படி ஒரு பாடல் வேண்டுமென எம்.எஸ்.வி-யிடம் சொல்ல உடனே டியூன் போட்டு, கண்ணதாசன் அதற்கு பாடல் எழுதி உடனே ரிக்கார்டிங் செய்து மைசூருக்கு அனுப்பி வைத்தனர்.

இது கூட பரவாயில்லை. ரிக்கர்டிங் தியேட்டரில் ஒரு பாடலை பதிவு செய்வதற்கு சில நிமிடங்கள் முன் வேறு ட்யூனை போட்டு அங்கேயே பாடலை ரிக்கார்டிங் செய்த சம்பவத்தைதான் இங்கே பார்க்க போகிறோம். ஸ்ரீதரின் இயக்கத்தில் சிவாஜி, கே.ஆர்.விஜயா ஆகியோர் நடித்து 1967ம் வருடம் வெளியான திரைப்படம் ஊட்டி வரை உறவு.

இந்த படத்தின் ஒரு சூழ்நிலைக்கு எம்.எஸ்.வி ஒரு ட்யூன் போட்டார். அதில் ஸ்ரீதருக்கு முழு திருப்தி இல்லை. இது சரியாக வருமா என கேட்க, ‘பாடல் முழுவதுமாக முடிந்து கேளுங்கள்’ என எம்.எஸ்.வி சம்மதிக்க வைத்தார். ரிக்கார்டிங் தியேடரில் பாடல் பதிவுக்கு தயாரானது. இசை கலைஞர்கள், பாடகி என எல்லோரும் தயாராக இருந்தனர். ஆனால், இயக்குனர் அங்கே இல்லை.

இதையும் படிங்க: தோல்விகளை சந்தித்த சிவாஜியை தூக்கிவிட்ட ஹிந்தி ரீமேக் படம்!… எந்த படம்னு தெரியுமா?…

எம்.எஸ்.வி அவரை தேடியபோது அவர் அறைக்கு வெளியே நின்றிருந்தார். எம்.எஸ்.வி அவரிடம் போய் கேட்க, இந்த பாடலில் எனக்கு திருப்தி இல்லை. இது வேண்டாம் என அவர் சொல்ல, உடனே அவரை உள்ளே அழைத்து சென்ற எம்.எஸ்.வி. எல்லோரின் முன்பும் வேறு சில டியூன்களை போட்டு காட்டினார்.

அதில் தனக்கு பிடித்த ஒன்றை ஸ்ரீதர் தேர்ந்தெடுத்தார். உடனே கண்ணதாசனும் வரவழைக்கப்பட்டு பாடல் எழுதப்பட்டது. இந்த பாடல் ஸ்ரீதருக்கு முழு திருப்தி. அப்படி உருவான பாடல்தான் ‘தேடினேன் வந்தது.. நாடினேன் தந்தது’ . இந்த பாடலை சுசீலா பாடியிருந்தார்,. இந்த பாடல் எப்போது கேட்டாலும் அவ்வளவு ரம்மியாக இருக்கும்.

இந்த தகவலை கண்ணதாசனின் மூத்த மகன் அண்ணாதுரை ஊடகம் ஒன்றில் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் மீது கடுப்பாகி ஃபிலிமை எரித்த தயாரிப்பாளர்!.. சிவாஜியை பலிகாடா ஆக்கி படமெடுத்த சம்பவம்…

 

Related Articles

Next Story