More
Categories: Cinema History Cinema News latest news

அலட்சியம் செய்த எம்.எஸ்.வியை கதறி அழ வைத்த பட்டுக்கோட்டையார்… இப்படி எல்லாம் நடந்துருக்கா?

1955ஆண்டு வெளியான படம் மகேஸ்வரி. இந்தப் படத்தில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் 5 பாடல்களை எழுதினார். இவரைப் பற்றி சுவாரசியமான ஒரு தகவல் உண்டு. அது என்னவென்று பார்க்கலாமா…

தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். இவர் சிறுவயது முதலே கவிதை எழுதுவதில் ஆர்வம் கொண்டு இருந்தார். திரைப்படங்களில் பாடல் எழுத வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தார். அப்போது படித்த பெண் என்ற படத்தில் பாடல் எழுதுவதற்கான வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. வெகுநாள்கள் கழித்து தான் அந்தப் படம் வெளியானது. ஆனால் அது தோல்வியாகி விட்டது.

Advertising
Advertising

இதையும் படிங்க… பண விஷயத்தில் கறார் காட்டிய கவுண்டமணி.. கேப்டன் மனசு யாருக்கு வரும்? கங்கை அமரன் பகிர்ந்த சீக்ரெட்

ஆனால் அதற்கு முன்பே 1955ல் மகேஸ்வரி படம் வெளியாகி விட்டது. இந்தப் படத்தில் 5 பாடல்களை எழுதினார். இதுவும் தோல்வியைத் தழுவியது. அதனால் அவரை திரையுலகினர் யாருமே கண்டுகொள்ளவில்லை. இந்தப் படத்திற்குப் பாடல் எழுதும்போது அவருக்கு மாடர்ன் தியேட்டர் மேலாளர் சுலைமானின் பழக்கம் கிடைத்தது. அப்போது மாடர்ன் தியேட்டர் சார்பாக பாசவலை என்ற படம் தயாரானது. இதற்கு எம்.எஸ்.வி. இசை அமைத்தார். இந்தப் படத்தின் கதை இதுதான். படத்தின் கதாநாயகன் எம்.கே.ராதா.

இவர் ஒரு மன்னர். இவரது சகோதரன் ஒரு பெண் மீது ஆசைப்படுகிறான். அதனால் தவறு செய்கிறான். வசமாக சிக்கி விடுகிறான். இதற்கு மக்கள் மன்னரிடம் நியாயம் கேட்கின்றனர். மன்னரோ தனது சகோதரனாக இருந்தாலும் அவனைத் தண்டிக்கிறேன் என்கிறார். அதனால் அவனைத் தேடுகிறார். அவனோ தப்பித்து விடுகிறான்.

சகோதரனைத் தப்பிக்க வைத்ததே மன்னன் தான் என மக்கள் ஆத்திரமடைகின்றனர். இதைப் பார்த்து டென்சனாகி விடும் மன்னர் தனது பதவியை விட்டுவிட்டு வனவாசம் செல்கிறார்.

அப்போது அவரது குழந்தைகள் பசியால் அழுகின்றன. இதனால் அவர்களை ஒரு இடத்தில் உட்கார வைத்து விட்டு உணவு தேடி அலைகிறார். அப்போது அங்கு யானை உள்பட விலங்குகள் வந்து விடுவதால் மன்னரின் மனைவி மற்றும் குழந்தைகள் தப்பிக்க முயற்சி செய்கின்றனர். இதனால் வேறு பாதைக்கு சென்று தொலைந்து விடுகின்றனர்.

அவர்களைத் தேடி மன்னர் அலைகிறார். தாகம் எடுக்கிறது. ஒரு குளத்தில் தண்ணீர் குடிக்கிறார். ஆனால் திருடர்கள் பயம் காரணமாக ஆடு மேய்ப்பவர்கள் குளத்தில் விஷத்தைக் கலந்து விடுகின்றனர். இந்த தண்ணீரை குடித்த மன்னரோ மயங்கி விடுகிறார். ஆடு மேய்க்கிறவர்கள் இவரை காப்பாற்றுகின்றனர்.

ஆனால், இவரோ சுயநினைவின்றி பைத்தியமாகி விடுகிறார். அப்போது ஓடிப்போன சகோதரன் திரும்பி வந்து மன்னரிடம் மன்னிப்பு கேட்கிறான். இவருக்கோ அவனை அடையாளம் தெரியவில்லை.

அந்த இடத்தில் தான் ஒரு பாடல் வருகிறது. எம்.எஸ்.வி. டியூன் போடுகிறார். இந்தப் பாடலுக்கு பெரிய பெரிய ஜாம்பவான்களான உடுமலை நாராயணகவி, மருதகாசி போன்றோர் பாடலை எழுதினர். ஆனாலும் பாட்டு எடுபடவில்லை. இதைப் பார்த்த சுலைமான் உடனடியாக இதுகுறித்து பட்டுக்கோட்டையாருக்கு தகவல் கொடுக்க, அவரும் அந்த சூழலுக்கு ஏற்ப பாடலை எழுதுகிறார். அதை சுலைமான் எம்எஸ்வி.யிடம் சொல்கிறார்.

பெரிய பெரிய அனுபவம் வாய்ந்த கவிஞர்களே திணறும்போது புதுப்பையனுக்கு எப்படி பாடல் எழுதத் தெரியும் என்று அதை மறுத்துவிடுகிறார். மறுநாளும் கவிஞர்கள் பாடல் எழுதுகிறார்கள். எதுவும் செட்டாகவில்லை. மறுநாளும் சுலைமான் பட்டுக்கோட்டையைப் பற்றி சொல்ல முதலில் எரிந்து விழும் எம்எஸ்வி. அப்புறம் கொண்டு வா பார்ப்போம் என்கிறார். பாடலைப் படித்துப் பார்க்கிறார். அந்தப் பாட்டு இவர் நினைத்தமாதிரியே நச்சென்று இருந்தது.

இதையும் படிங்க… திருமுருகன் கூட வொர்க் பண்ணும் போது இந்த கஷ்டத்தை அனுபவிச்சேன்! நாதஸ்வரம் ஹீரோயின் பளீச்

அந்தப் பாடல் இதுதான். உனக்கும் சொந்தம். எனக்கும் சொந்தம். உலகத்திற்கு எதுதான் சொந்தமடா என்ற பாடல். உடனே அதற்கு டியூன் போட்டு ரெக்கார்டிங்கிறகு அனுப்புகிறார். எழுதிய பையனைக் கூட்டி வா என்கிறார்.

ஆண்டவா எனக்கு இவ்வளவு கர்வத்தைக் கொடுத்து விட்டாயே. ஒரு கவிஞர் எழுதிய பாடலை என்ன என்று கூட பார்க்காமல் 3 நாள்களாக தட்டிக்கழித்து விட்டேனே. எனக்கு ஏன் இவ்வளவு கர்வத்தைக் கொடுத்தாய்…? என அழுது தன் மனபாரத்தைக் குறைத்துக் கொண்டார். அன்று முதல் யார் வந்தாலும் அவரிடம் என்ன திறமை உள்ளது என்று தான் பார்ப்பாராம் எம்எஸ்.வி.

Published by
sankaran v

Recent Posts