More
Categories: Cinema History Cinema News latest news

பாடல் வரிகளை பார்த்து நாள் முழுவதும் அழுத எம்.எஸ்.வி!.. எந்த பாடல் தெரியுமா?…

1950 முதல் 70களின் இறுதிவரை தமிழ் சினிமாவின் பல திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். பல படங்களுக்கு ராமமூர்த்தியுடன் இணைந்து இவர் இசையமைத்தார். அந்த 30 வருடங்களில் வெளியான பெரும்பலான படங்களுக்கு எம்.எஸ்.வியே இசையமைத்தார். பல காதல், தத்துவ, சோக பாடல்களை கொடுத்துள்ளார்.

கண்ணதாசன் மற்றும் வாலியின் வரிகளில் எம்.எஸ்.வி இசையமைத்த நூற்றுக்கணக்கான பாடல்கள் காலத்தை தாண்டியும் மக்களின் மனதில் இப்போதும் நிற்கிறது. எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், முத்துராமன், ஜெய் சங்கர் என பலரின் படங்களுக்கும் இவர் இசையமைத்தார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: குடிகாரன் இப்படியா பாடுவான்?!.. எம்.எஸ்.வியின் வரிகளை திருத்திய கண்ணதாசன்!. அதுல அவரு கிங்கு!..

எம்.எஸ்.வி என்றால் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது அவரின் சிரித்த முகம்தான். ஆனால், அவர் நாள் முழுக்க அழுது கொண்டே இருந்த சம்பவம் பற்றித்தான் இங்கே பார்க்க போகிறோம். அப்போது பல படங்களை தயாரித்து வந்த மாடர்ன்ஸ் தியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்த திரைப்படம்தான் பாசவலை. இப்படம் 1956ம் வருடம் வெளியானது.

இப்படத்தில் எம்.கே.ராதா, கரிகாபட்டி வரலட்சுமி, எம்.என்.ராஜம், வி.எஸ்.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அந்த படத்தில் ஒரு பெரிய ராஜா தனது சொத்தையெல்லாம் இழந்து நடுரோட்டுக்கு வந்துவிடுவது போல் ஒரு காட்சி வரும். இதற்குபாடலை எழுத மருதகாசி, உடுமலை நாராயணகவி போன்ற ஜாம்பாவன்களை அழைத்தார்கள். ஆனால், அவர்களால் எழுத முடியவில்லை.

இதையும் படிங்க: கண்ணதாசனின் கடினமான வரிகளுக்கு ட்யூன் போட்ட எம்.எஸ்.வி!.. எம்.ஜி.ஆர் அடித்த செம கமெண்ட்!..

இதனால் எம்.எஸ்.வி அப்செட் ஆனார். ஒருநாள் வி.எஸ்.கோபாலகிருஷ்ணன் உருவத்தில் மிகவும் எளிமையாக இருக்கும் தன்னுடைய நண்பர் ஒருவரை எம்.எஸ்.வியிடம் அழைத்து சென்றார். ஆனால், ஏற்கனவே அப்செட்டில் இருந்த எம்.எஸ்.வி. அவரை சந்திக்க மறுத்துவிட்டார். தொடர்ந்து 4 நாட்களை அவரை பார்க்க முடியவில்லை.

5ம் நாள் நீங்கள் அவரை சந்திக்காவிட்டாலும் பரவாயில்லை. அவர் எழுதிய இந்த பாடல் வரிகளை படித்து பாருங்கள் என சொல்லி அந்த பாடலை கையில் கொடுத்தார் கோபாலகிருஷ்ணன். அதை வாங்கி படித்த பார்த்த எம்.எஸ்.வி மனமுடைந்து போனாராம். மேலும், ஒரு அறைக்குள் சென்று ஒரு நாள் முழுவதும் அழுது கொண்டே இருந்தாராம்.

அந்த பாடலை எழுதியது பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். அந்த பாடல்தான் பாசவலை படத்தில் இடம் பெற்ற ‘உனக்கெது சொந்தம். எனக்கெது சொந்தம்.. இந்த உலகுக்கு எதுதான் சொந்தமடா’. இந்த பாடல் அந்த காலத்தில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நாள் முழுக்க தூங்கி கொண்டே இருந்த கண்ணதாசன்!. கடுப்பில் கத்திய எம்.எஸ்.வி.. வந்ததோ சூப்பர் பாட்டு!..

 

Published by
சிவா

Recent Posts