Connect with us
rahman

latest news

ஏஆர் ரஹ்மான் இசையில் பாட மறுத்த பாடகர்.. இசைப்புயல் சொன்ன ஒரே வார்த்தை! பாட்டு சூப்பர் ஹிட்

உலகளவில் மிகவும் புகழ்பெற்ற இசையமைப்பாளராக இருப்பவர் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான். சிறு வயது முதலே இசையில் மிகவும் ஆர்வம் கொண்டவராக இருந்தார் .இவருடைய இயற்பெயர் திலீப் குமார் என்பது அனைவருக்கும் தெரியும். எம் எஸ் விஸ்வநாதன், இளையராஜா ஆகியோரின் இசைக்குழுவிலும் இவர் பணியாற்றி இருக்கிறார்.

தன்னுடைய இசை புலமையால் லண்டன் இசைக்கல்லூரியில் ஸ்காலர்ஷிப் பெற்று அங்கு இசையை கற்றவர் ரஹ்மான். ஆரம்பத்தில் விளம்பரப் படங்களுக்கு டியூன் போட்டுக் கொண்டிருந்த ஏ ஆர் ரகுமான் மணிரத்தினம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் முதன் முதலில் 1992 ஆம் ஆண்டு தன்னுடைய இசை அறிமுகத்தை பதிவு செய்தார் .

இதையும் படிங்க: Kanguva: காசு கொடுத்து கங்குவாவை ரிலீஸ் பண்ண சூர்யா!.. ஓவர் கான்பிடன்ஸ்ல இப்படி ஆகிப்போச்சே!…

முதல் படமே இவருக்கு தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது. அந்த ஒரு படம் அடுத்தடுத்து அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. கிட்டத்தட்ட 2000 ஆம் ஆண்டு வரை இவர் இசையமைத்த படங்கள் அனைத்துமே அவருக்கு பிலிம் பேர் விருதை பெற்றுக் கொடுத்தது. ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் இசையமைத்ததற்காக இரண்டு ஆஸ்கார் விருதை பெற்றார் ஏ ஆர் ரகுமான்.

ஆஸ்கார் விருது மட்டுமல்லாமல் கோல்டன் க்ளோப் ,பாஃப்டா ஆகிய விருதுகளையும் வென்றிருக்கிறார். சினிமா மட்டுமல்லாமல் பல வெளிநாட்டு கச்சேரிகளையும் நடத்தி வருகிறார். இவருடைய இசையில் பாடுவதற்கு வாய்ப்புகள் வராதா என ஏங்கிக் கொண்டிருக்கும் பாடகர்கள் எத்தனையோ பேர் .அப்படி வந்த வாய்ப்பை தட்டி கழித்திருக்கிறார் பிரபல இசை அமைப்பாளரும் பாடகர்மான எம் எஸ் விஸ்வநாதன்.

இதையும் படிங்க: Kanguva: அடக்கொடுமையே… அமரன்ல பாதி கூட தாண்டல போலயே?!.. கங்குவா படத்தின் தமிழ்நாடு வசூல் இதோ!…

ரகுமான் நடிப்பில் வெளிவந்த சங்கமம் படத்தில் மிகவும் புகழ்பெற்ற பாடல் ஆன ஆளாளக் கண்டா பாடலை பாடியவர் எம் எஸ் விஸ்வநாதன் தான். ஆனால் முதலில் இந்த பாடலை பாடுவதற்கு அவருக்கு விருப்பமே இல்லையாம். அதனால் இதை ரகுமானிடமே நேரடியாக போய் சொல்லி விடலாம் என சென்று இருக்கிறார் எம்எஸ்வி.

msv

msv

அங்கு போனதும் ஏ ஆர் ரகுமான் எம்எஸ்வியிடம்  ‘இன்று என்னுடைய பிறந்தநாள் .என்னுடைய பிறந்தநாளின் போது  இந்த பாடலை ஆரம்பிப்பதில் மிகவும் மகிழ்ச்சி’ என சொல்லி வாழ்த்து கேட்டாராம். இந்த நேரத்தில் எப்படி இதை மறுப்பது என நினைத்த எம் எஸ் வி அதன் பிறகு அந்த பாடலை பாடியிருக்கிறார். அது இன்றுவரை மிகவும் புகழ் பெற்ற பாடலாக மாறி இருக்கிறது.

google news
Continue Reading

More in latest news

To Top