எம்ஜிஆர் மேல் கோபம் கொண்ட எம்எஸ்வி… ஆனா அதுலதான் இருக்கு டுவிஸ்டு!

#image_title
இசைஞானி இளையராஜாவின் பாடல்களுக்கு ஏற்ப ஆர்.சுந்தரராஜன் இயக்கிய படம் தான் வைதேகி காத்திருந்தாள். அதே மாதிரி இளையராஜாவின் பாடல்கள் முதலில் உருவானது. அதன்பிறகு அதே மாதிரி பாடல்களுக்கு ஏற்ப மணிவண்ணன் இயக்கிய படம் மோகன் நடித்த இளமைக் காலங்கள். அந்த வகையில் எம்எஸ்வி.யின் பாடல்களுக்கு ஏற்ப எம்ஜிஆர் நடித்து இயக்கிய படம் உலகம் சுற்றும் வாலிபன். இந்தப் படத்துக்கு எம்ஜிஆர் முதல்ல கதை எழுதவில்லை.
எம்எஸ்வியிடம் பாடல்களை வாங்கிய பிறகு அதற்கேற்ப கதை எழுதினாராம். எம்ஜிஆர் முதலில் எந்தெந்த நாட்டுல எல்லாம் படமாக்கப் போறேன் என்பதை எம்எஸ்வியிடம் சொல்லி அதற்கேற்ப பாடல்களைத் தயார் செய்யச் சொல்வாராம். எம்எஸ்வி.யும் பல பாடல்களை கம்போஸ் பண்ணுவாராம். பெரும்பாலும் அந்தப் படத்தில் எம்ஜிஆர் பாடல்களை ரசிக்கவில்லை என்பதுதான் உண்மை.
அதனால எம்ஜிஆர் மீது எம்எஸ்வி.க்கு மிகப்பெரிய கோபம் இருந்ததாம். படத்துக்குப் பாட்டு வேணுமேன்னு பதிவு செய்தாராம். 15 பாட்டு போட்டும் எம்ஜிஆருக்குப் பிடிக்கல. அந்த மனக்கவலை எம்எஸ்வியை அரித்துக் கொண்டே இருந்ததாம். அதனால் அந்தப் படத்துக்கு மிகப்பெரிய சம்பளத்தை எம்ஜிஆர் கொடுக்க முன்வந்தாராம்.
ஆனால் எம்எஸ்வி. அதை வாங்கவில்லை. ஏன்னு கேட்டபோது நான் நடந்ததைச் சொன்னேன். அப்போ தான் எம்ஜிஆர் உண்மையைச் சொன்னார். நான் நன்றாக இல்லைன்னு சொன்னால் தான் நீ அதைவிட நன்றாக பாடல்களைத் தருவாய். எல்லாப் பாடல்களுமே அருமை. மிகவும் அற்புதம் என்றாராம் எம்ஜிஆர்.
மெல்லிசை மன்னர் எம்எஸ்விஸ்வநாதன் தன்னோட வாழ்க்கை வரலாற்று நூலில் எம்ஜிஆருடன் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் பணியாற்றிய போது நடந்த அனுபவங்களைத் தான் மேற்கண்டவாறு பதிவு செய்துள்ளார்.