படத்தில் நடிக்க எம்.எஸ்.வி போட்ட ஒப்பந்தம்! எல்லாம் அந்த ஒருத்தருக்காகத்தான் - மெய்சிலிர்க்க வைத்த சம்பவம்

msv
MS Vishwanathan: இசையில் கொடிகட்டி பறந்த ஜாம்பவான்கள் ஏராளம். அவர்களில் காலத்துக்கும் மறக்க முடியாத நினைவலைகளை விட்டு சென்றவர் மெல்லிசை மன்னன் எம்.எஸ்.விஸ்வநாதன். நடிகராக வேண்டும் என்ற ஆசையில் தான் இந்த திரையுலகிற்கு வந்தார்.
ஆனால் விதி அவரை இசையமைப்பாளராக பார்க்க ஆசைப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் விஸ்வநாதன் - ராமமூர்த்தி என இரட்டையர்களாகத்தான் தன் இசை பயணத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். ராமமூர்த்தி விஸ்வநாதனின் நண்பர்.
இதையும் படிங்க: தமிழ் சினிமாவில் எல்லாத்துக்கும் முதல் படம்!. சத்தமில்லாமல் எம்.ஜி.ஆர் செய்த சாதனை!..
இருவரும் சேர்ந்து நூற்றுக்கணக்கான படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்கள்.ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு பிறகு இருவரும் பிரிந்து விட்டார்கள். காரணம் எம்.எஸ்.விஸ்வநாதன் சொந்தமாக ஒரு படத்தை தயாரித்து தோல்வியை தழுவ அந்த தோல்வியில் தன்னை சேர்த்துக் கொள்ளக் கூடாது என ராமமூர்த்தி கூறிவிட்டாராம்.
அதிலிருந்தே இருவரும் பிரிந்து விட்டதாக செய்திகள் கூறுகின்றன. அதனை அடுத்து ராமமூர்த்தி 1966 முதல் 1986 வரை தனியாகவே இசையமைத்து வந்தார்.அதன்பின் 30ஆண்டுகளுக்கு பிறகு எங்கிருந்தோ வந்தான் என்ற படத்தில் இருவரும் சேர்ந்து இசையமைத்தார்களாம்.
இதையும் படிங்க: மன்சூர் அலிகான் கொடுத்த புது ட்விஸ்டு…! எனக்கு இல்ல எண்ட்டு..! பேசிய எல்லாருக்கும் நோட்டீஸ் உண்டு..!
1995 ஆம் ஆண்டு வெளியான கல்கி என்ற படத்தின் மூலம் தான் எம்.எஸ்.வி நடிகராக அவதாரம் எடுத்தார். இவர் நடித்த படங்களில் மிகவும் பிரபலமான படங்கள் என்றால் காதலா காதலா மற்றும் காதல் மன்னன் போன்ற திரைப்படங்கள்.
இதில் காதல் மன்னன் திரைப்படத்தில் முதலில் எம்.எஸ்.வி நடிக்க மறுத்திருக்கிறார். விவேக் எத்தனை முறை பேசியும் நடிக்க முடியாது என சொல்லியிருக்கிறார். இருந்தாலும் விடாமல் துரத்திய விவேக் எப்படியோ எம்.எஸ்.வியை சம்மதிக்க வைத்து விட்டார்.
இதையும் படிங்க: ஜெமினி கணேசன் படத்துக்கு சம்பளத்தை குறைக்க சொன்ன என்.டி.ராமராவ்… அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா?…
எனினும் இந்தப் படத்தில் நடிக்க எம்.எஸ்.வி 10 லட்சம் சம்பளமாக கேட்டாராம். இயக்குனரும் அதற்கு சம்மதித்து விட்டார். ஆனால் அந்த சம்பளத்தில் 5 லட்சம் தனக்கும் மீதி 5 லட்சம் தன் நண்பரான ராமமூர்த்திக்கும் என்று சொல்லியிருக்கிறார். இதன் மூலம் தன் நண்பன் மீது எந்தளவு மரியாதையும் அக்கறையும் எம்.எஸ்.வி வைத்திருந்தார் என்பதை காட்டுகிறது.