மதியம் படமாக்கவேண்டிய பாடலுக்கு காலையில் ரெக்கார்டிங் செய்த எம்.எஸ்.வி… வேற லெவல்!!
1962 ஆம் ஆண்டு சி.வி.ஸ்ரீதர் இயக்கத்தில் பாலாஜி, முத்துராமன், விஜயகுமாரி ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “போலீஸ்காரன் மகள்”. இத்திரைப்படத்திற்கு விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஆகியோர் இசையமைத்திருந்தனர். இத்திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் கண்ணதாசன் எழுதியிருந்தார்.
“போலீஸ்காரன் மகள்” திரைப்படத்தின் கிளைமேக்ஸில் கதாநாயகி விஜயகுமாரி இறந்துப்போவது போன்ற ஒரு காட்சி இடம்பெற்றிருந்தது. இந்த காட்சியை படமாக்கும்போது, இதில் ஒரு பாடல் இருந்தால் அருமையாக இருக்கும் என நினைத்தாராம் இயக்குனர் ஸ்ரீதர்.
ஸ்ரீதர் இவ்வாறு கூறியவுடன் படக்குழுவினர் “இன்றைக்குள் இந்த காட்சியை படமாக்க வேண்டும். இந்த நேரத்தில் பாடல் எப்படி தயார் செய்யமுடியும்” என கூறியிருக்கிறார்கள். ஆனால் ஸ்ரீதர் எதற்கும் யோசிக்கவில்லையாம். உடனே எம்.எஸ்.வியை படப்பிடிப்புத் தளத்திற்கு அழைத்திருக்கிறார்.
எம்.எஸ்.வியிடம் இந்த சிச்சுவேஷனுக்கு பாடல் வேண்டும் என ஸ்ரீதர் கேட்க, அதற்கு எம்.எஸ்.வி. “கண்ணதாசனை வரச்சொல்லுங்க” என கூறியிருக்கிறார். உடனே கண்ணதாசனையும் அழைத்து வந்திருக்கிறார்கள் படக்குழுவினர்.
கண்ணதாசன், எம்.எஸ்.வி ஆகியோர் இணைந்து அந்த படப்பிடிப்புத் தளத்திலேயே அப்பாடலை உருவாக்கி, அந்த பாடலை உடனே சீர்காழி கோவிந்தராஜனை பாடவைத்து ரெக்கார்ட் செய்து மதியமே தயார் செய்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: “பொய் சொல்லத் தெரிஞ்சா சொல்லுங்க”… தன்னிடம் கப்சா விட்ட ஒளிப்பதிவாளரை லெஃப்ட் ரைட் வாங்கிய விஜய்…
அதன் பின்தான் அந்த கிளைமேக்ஸ் காட்சியை படமாக்கினார்களாம் படக்குழுவினர். இவ்வாறு உடனுக்குடனே ரெக்கார்ட் செய்த பாடல்தான் “பூ சுமந்து போகின்றாள்” என்ற பாடல்.