ஒரு பாட்டுக்கு 35 டியூன் போட்ட எம்.எஸ்.வி!.. எம்.ஜி.ஆர் செய்ததுதான் ஹைலைட்!..

by சிவா |
msv
X

msv

திரையுலகில் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி ஆகியோரின் பல திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன். கருப்பு வெள்ளை காலம் முதல் கலர் சினிமா வரை பல நூறு பாடல்களுக்கு எம்.எஸ்.வி இசையமைத்துள்ளார். ரசிகர்களால் மெல்லிசை மன்னர் என அழைக்கப்படுபவர்.

சிவாஜி படங்களுக்கு எப்படி இசையமைக்க வேண்டும், எம்.ஜி.ஆர் படங்களுக்கு எப்படி இசையமைக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டு அவர்களுக்கு பல வெற்றிப்பாடல்களை கொடுத்தார். அந்த பாடல்கள் காலத்தையும் தாண்டி நிற்க கூடியவை. இப்போது கூட பலருக்கும் எம்.எஸ்.வியின் பாடல்கள்தான் பிடித்தவையாக இருக்கிறது.

msv

msv

சிவாஜி படம் என்றால் சோகம், தத்துவம், காதல் என வேறு ரகம். எம்.ஜி.ஆர் படங்கள் என்றால் காதல், தத்துவம் மற்றும் எம்.ஜி.ஆர் தன்னை பற்றி புகழ் பாடுவது போல் பாடல் வைக்க வேண்டும். அதுதான் அவரின் ரசிகர்களுக்கு பிடிக்கும். அதை புரிந்து கொண்டு அவருக்கு பாடல்களை அமைத்தவர். எம்.ஜி.ஆர் புகழ்பாடும் பாடல்களை அதிகம் எழுதியவர் கவிஞர் வாலி.

MSV and MGR

MSV and MGR

நடிகர் எம்.ஜி.ஆரும் இசைஞானம் உள்ளவர்தான். பொதுவாக ஒரு படத்திற்கு மெட்டை ஓகே செய்வது இயக்குனர்தான். ஆனால், எம்.ஜி.ஆர் படம் எனில் அதை முடிவு செய்வது எம்.ஜி.ஆர்.தான். அவரை அவ்வளவு சுலபமாக திருப்திபடுத்தி விடுத்த முடியாது. பல ட்யூன்களை கேட்ட பின்தான் அவர் முடிவு செய்வார். இதுபற்றிய பல சுவாரஸ்ய தகவல்களை எம்.எஸ்.வியே பல பேட்டிகளில் பகிர்ந்துள்ளார்.

Ulagam sutrum valiban...MGR

20, 30 டியூன்களை போட்டு காட்டுவேன். இது வேண்டாம் அடுத்து என்பார். அதன்பின் முதலில் போட்ட டியூனின் பல்லவியையும், 8வதாக போட்ட சரணமும் நன்றாக இருக்கிறது. இரண்டையும் இணைத்துக்கொள்ளுங்கள் என்பார். அதேபோல், உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்திறு ஒரு பாடல் மட்டும் இசையமைக்க வேண்டியிருந்தது.

அந்த பாடலுக்காக நான் 20 ட்யூன்களை போட்டேன். எம்.ஜி.ஆருக்கு திருப்தி இல்லை. அதே கோபத்தில் மேலும் 15 டியூன்களை போட்டு காட்டினேன். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு அமைதியாக யோசித்த எம்.ஜி.ஆர் ‘எல்லாம் நன்றாக இருக்கிறது. ஆனால் நீங்கள் முதலில் போட்ட டியுன் சிறப்பாக இருந்தது. அதையே வைத்துக்கொள்வோம் என்றார்’ என எம்.எஸ்.வி கூறினார்.

இதையும் படிங்க: அரைடவுசில் தொடையை காட்டும் முல்லை நடிகை!.. நீயா செல்லம் இப்படி!..

Next Story