Connect with us
mumtaj

Cinema News

ஏன்டா அப்படி நடிச்சோம்னு அழுதுக்கிட்டு இருக்கேன்!.. கண்ணீர் விட்டு கதறும் மும்தாஜ்!…

20 வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் கவர்ச்சி புயலாக நுழைந்தவர்தான் மும்தாஜ். இவரை ‘மோனிசா என் மோனாலிசா’ என்கிற படத்தில் டி.ராஜேந்திர் அறிமுகம் செய்து வைத்தார். அதன்பின் மலபார் போலீஸ், குஷி, பட்ஜெட் பத்மநாபன், லூட்டி, சொன்னால்தான் காதலா, வேடம், சாக்லேட் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார்.

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் உருவான குஷி படத்தில் கவர்ச்சி உடை அணிந்து வந்து விஜயிடம் ஜொள்ளுவிடம் வேடத்தில் ரசிகர்களை சூடேத்தினார். குறிப்பாக அந்த படத்தில் இடம் பெற்ற ‘கட்டிப்புடி கட்டிப்புடிடா.. கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா’ பாடலில் அம்மணி காட்டிய கவர்ச்சி காஜி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

இதையும் படிங்க: வடிவேலுவை கோவை சரளா புரட்டி எடுத்ததுக்கு காரணம் இதுதான்!.. ரகசியம் சொன்ன இயக்குனர்…

அதேபோல், சாக்லேட் படத்தில் கையில் துண்டை வைத்துகொண்டு அவர் ஆடிய மலமல மருதமலை பாடலிலும் முழு கவர்ச்சி விருந்து காட்டினார். ஒருபக்கம் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் நடித்து அங்கும் கவர்ச்சி காட்டினார்.

mumtaj

கடைசியாக ராகவா லாரன்ஸ் நடித்து ராஜாதி ராஜா படத்தில் வில்லியாக நடித்திருந்தார். அதன்பின் 2 தெலுங்கு படங்களில் நடித்துவிட்டு சினிமாவில் நடிப்பதையே நிறுத்திவிட்டார். அதன்பின் கடந்த 8 வருடங்களாக சினிமாவில் மும்தாஜை பார்க்கவே முடியவில்லை. இடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மட்டும் கலந்து கொண்டார்.

இதையும் படிங்க: விஜய்க்கு டான்ஸ் சொல்லிக் கொடுத்த குரு யார் தெரியுமா ? அவரே சொன்ன சுவாரஸ்ய தகவல்

இந்நிலயில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய மும்தாஜ் ‘நான் கவர்ச்சி உடைகளை அணிந்து நடனமாடி தவறு செய்துவிட்டேன். இப்போது மனசாட்சி உறுத்துகிறது. தினமும் வீட்டில் இதற்காக அழுது கொண்டிருக்கிறேன். இப்போது அல்லாவை தவிர எதிலும் எனக்கு ஈடுபாடு இல்லை. என் கையில் மட்டும் நிறைய பணம் இருந்தால் நான் நடித்த எல்லா படங்களின் உரிமையையும் வாங்கி அதில் இருக்கும் என் கவர்ச்சி காட்சிகளை நீக்கிவிடுவேன்.

கூகுளில் இருந்தும் என் கவர்ச்சி புகைப்படங்களை நீக்க ஆசைப்படுகிறேன். ஆனால், என்னால் அது முடியாது. எனக்கு இனிமேல் திருமணமாகும் என்கிற நம்பிக்கையெல்லாம் இல்லை. நடந்தால் பார்ப்போம். அது அல்லாவின் ஆணை. ரசிகர்கள் தயவுசெய்து என் கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பரப்பாதீர்கள்’ என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்திருக்கிறார் மும்தாஜ்.

google news
Continue Reading

More in Cinema News

To Top