பாக்யராஜிக்கு டிமிக்கி கொடுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்: இவருக்கே இந்த நிலைமையா?

by ராம் சுதன் |
aiswarya rajesh
X

ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறக்கும் இயக்குனர் மற்றும் நடிகர் என்றால் அதில் பாக்யராஜ் மிகவும் முக்கியமானவர் ஆவார். இவர் இயக்கி நடித்த அந்த 7 நாட்கள் படம் எதிர்பாராத வகையில் மாபெரும் வெற்றி பெற்றது. அதே போல் பாக்யராஜின் திரை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் அது முந்தானை முடிச்சு படம் தான்.

கதை, திரைக்கதை, வசனம் என எழுதி இயக்கியதோடு பாக்கியராஜே முதன்மை கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். இவருக்கு இணையாக நடிகை ஊர்வசி இந்த படத்தில் நடிப்பில் அசத்தி இருப்பார். கடந்த 1985ஆம் ஆண்டு வெளியான இப்படம் வெள்ளி விழா கொண்டாடியது. இப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் கூட நடிகர் அமிதாப்பச்சன் நடிக்க விரும்பியதாக பாக்யராஜ் சமீபத்தில் கூறியிருந்தார்.

bhagyaraj

bhagyaraj

இந்நிலையில் தற்போது சுமார் 37 ஆண்டுகளுக்குப் பின்னர் முந்தானை முடிச்சு படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இதில் நாயகனாக நடிகர் சசிகுமார் நடிக்க உள்ளாராம். முதல் பாகத்தை இயக்கிய பாக்யராஜே இந்த பாகத்திற்கும் கதை, திரைக்கதை மற்றும் வசனம் ஆகியவற்றை எழுதி முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளாராம்.

இதுதவிர முந்தானை முடிச்சு படத்தில் ஊர்வசி நடித்த கதாபாத்திரத்தில் தற்போது நடிகல ஐஸ்வர்யா ராஜேஷ் தான் நடிக்க உள்ளார். ஏனென்றால் சமீபகாலமாகவே ஐஸ்வர்யா ராஜேஷ் மாறுபட்ட கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அதுமட்டும் இன்றி ஊர்வசி அளவிற்கு திறமையான நடிப்பை வெளிப்படுத்த இவரால் மட்டுமே முடியும் என்பதால், ஐஸ்வர்யாவை ஒப்பந்தம் செய்துள்ளார்கள்.

ஆனால் அதில் ஒரு சிக்கல் எழுந்து விட்டதாம். அதாவது ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது கைவசம் நிறைய படங்களை வைத்துள்ளதால், இந்த படத்திற்கு அவரால் தேதி ஒதுக்க முடியவில்லையாம். இருப்பினும் அவர் தேதி கிடைக்கும் வரை காத்திருக்கலாம் என படக்குழுவினர் முடிவு செய்துள்ளதால், தற்போது படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Next Story