என்னது விஜயகாந்துக்கு தம்பியா? பிச்சுக்கிட்டு போன கூட்டம்! ஒரே நாளில் பிரபலமான நடிகர்

Published on: July 3, 2023
viji
---Advertisement---

தமிழ் சினிமாவில் விஜயகாந்துக்கு எப்பேற்பட்ட மரியாதையும் மதிப்பும் இருக்கின்றது என அனைவருக்கும் தெரிந்த விஷயம். அந்த அளவுக்கு மக்கள் மனதில் ஆழமாக குடி கொண்டவர் விஜயகாந்த். விஜயகாந்த் என்றாலே பிறருக்கு கொடுத்து உதவும் மனப்பான்மை, அடுத்தவர் நலனில் அக்கறை என்றே கூறலாம்.

viji1
viji1

அத்தகைய சிறப்புமிக்க மனிதராகவே நிஜத்திலும் சரி சினிமாவிலும் இருந்தார். அவருடைய படங்களுக்கு என்றே சிறப்பு மரியாதை உண்டு. அந்த ஒரு காரணத்திற்காகவே நடிகர் சங்கத்தலைவராகவும் பொறுப்பேற்க முடிந்தது. நடிகர் சங்கத்தில் இருந்த அனைத்துக் கடனையும் விஜயகாந்தே வந்து தீர்த்தார்.

மேலும் துணை நடிகர்களின் வாழ்வாதாரத்தையும் நடிகர் சங்கத்தின்  மூலம் உயர்த்தினார். இந்த நிலையில் விஜயகாந்தின் தம்பி நடிக்கிறார் என்ற ஒரு புரளியை அப்பவே கிளப்பி விட்டிருக்கின்றனர். அவர் வேறு யாருமில்லை. நடிகர் முரளி.

viji2
viji2

முரளி நடிக்க வந்த புதிதில் பார்ப்பதற்கு விஜயகாந்தை போலவே இருந்திருக்கிறார். அவர் நடித்த பூவிலங்கு படம் வெளியான போது முதல், இரண்டு  நாள்கள் ரசிகர்களின் கூட்டமே இல்லையாம். ஆனால் மூன்றாவது நாளில்  இருந்து மட மடவென் மக்கள் கூட்டம் அலைமோதியதாம்.

விசாரித்ததில் முரளியை விஜயகாந்தின் தம்பி என்று சில பேர் புரளியை கிளப்பி விட்டிருக்கின்றனர். கேப்டன் என்றாலே ஓடிவந்தி பார்க்கும் கூட்டம் அவருடைய தம்பி என்றால் சும்மா விடுவார்களா? அதன் காரணமாகவே அவரின் தம்பி எப்படி நடிக்கிறார் என்பதை பார்க்கவே அந்தப் படத்தை பார்க்க வந்தார்களாம்.

viji3
viji3

இதை பற்றி முரளியும் ஒரு பேட்டியில் நான் பார்ப்பதற்கு அப்பொழுது விஜயகாந்தை மாதிரியே இருந்ததனால் அப்படி சொன்னார்கள் என்று கூறியிருக்கிறாராம். இந்த தகவலை பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறினார்.

இதையும் படிங்க : பிரபல நடிகரின் மகனுக்கு வலை விரித்த அனுஷ்கா… வாய்ப்புக்காக இப்படியெல்லாமா செய்வாங்க?!..

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.