தர்பார் படம் ஃபிளாப் ஆனதுக்கு இதுதான் காரணம்!.. முதன் முறையாக வாய் திறந்த முருகதாஸ்!..

by சிவா |   ( Updated:2023-04-04 08:13:41  )
darbar
X

தீனா திரைப்படம் மூலம் இயக்குனரானவர் ஏ.ஆர்.முருகதாஸ். அதன்பின் விஜயகாந்தை வைத்து அவர் இயக்கிய ரமணா திரைப்படம் அவரை அடுத்த ஷங்கர் என்கிற ரேஞ்சுக்கு உயர்த்தியது. விஜயகாந்தை வைத்து பெரிய ஹிட் படத்தை கொடுத்துவிட்டதால் முன்னணி மற்றும் பெரிய இயக்குனர்களிடன் பட்டியலில் முருகதாஸ் இடம் பிடித்தார். அதன்பின் கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி, தர்பார் ஆகிய படங்களை இயக்கினார்.

darbar

இவர் கடைசியாக இயக்கிய திரைப்படம் தர்பார். இப்படத்தில் ரஜினி ஹீரோவாக நடிக்க நயன்தாரா, யோகிபாபு, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ் என பலரும் நடித்திருந்தனர். ஆனால், அந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த படம் 2020ம் ஆண்டு வெளியானது. இந்த படத்திற்கு பின் விஜயை வைத்து ஒரு படத்தை முருகதாஸ் இயக்க வேண்டியிருந்தது. ஆனால், சில காரணங்களால் அந்த படத்திலிருந்து முருகதாஸ் விலகினார். கடந்த இரண்டு வருடங்களாக முருகதாஸ் எந்த படத்தையும் இயக்கவில்லை. முருகதாஸ் இயக்கும் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது.

இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு முருகதாஸ் பேட்டியளித்தார். அப்போது தர்பார் திரைப்படத்தின் தோல்வி பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் சொன்ன முருகதாஸ் ‘நான் ரஜினி சாரின் தீவிர ரசிகன். இயக்குனர்கள் எல்லோருக்கும் அவரை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்கிற ஆசை வரும். நானும் அப்படித்தான். ஆனால், குறுகிய காலகட்டத்தில் அந்த படத்தை முடிக்க வேண்டியிருந்தது.

ஏனெனில் ஆகஸ்டு மாதத்தில் ரஜினி சார் அரசியல் கட்சி துவங்குவதாக இருந்தது. அதோடு, அதுதான் ரஜினி சாரின் கடைசி திரைப்படம் எனவும் சொல்லப்பட்டு வந்தது. எனவே, இந்த வாய்ப்பை விட்டுவிடக்கூடாது என அப்படத்தை இயக்கினேன். எவ்வளவு திறமை வாய்ந்த இயக்குனராக இருந்தாலும் சரியான திட்டமிடல் இல்லாமல் குறைந்த காலத்தில் படத்தை இயக்கி முடிக்கும் நிர்பந்தம் இருந்தால் அது தோல்வியில் முடியும் என்பதை நான் தர்பார் படம் மூலம் கற்றுக்கொண்டேன்’ என முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பக்கத்து வீட்டு பெண் காம்பவுண்டில் எகிறி குதிச்சு என்ன பண்ணாரு தெரியுமா?.. ஜேம்ஸ் வசந்தனை வெளுத்து வாங்கும் கனல் கண்ணன்!..

Next Story