இன்று கோலிவுட்டில் பல இசையமைப்பாளர்கள் தங்கள் திறமையால் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர். அனிருத், யுவன் சங்கர் ராஜா, இமான், ஹரீஸ் ஜெயராஜ் என இன்னும் எத்தனையோ புதுமுக இசைக்கலைஞர்கள் சினிமாவில் பணியாற்றி வருகின்றனர். ஆனால் எம்.எஸ்.விக்கு பிறகு இசையில் ஒரு புதுமையை புகுத்தியவர் இசைஞானி இளையராஜா.
அன்னக்கிளி படத்தில் தொடங்கிய தன் பயணத்தை இன்று வரை விடாமல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றார். அவருக்கு அடுத்த படியாக மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட இசைக்கலைஞர் என்றால் அது ஏ.ஆர். ரஹ்மான் தான். 90களில் ஒரு பக்கம் இளையராஜாவின் இசையில் பல படங்கள் வந்து கொண்டிருந்தாலும் தன்னை திரும்பி பார்க்க வைத்தவர் ஏ.ஆர்.ரஹ்மான்.
இதையும் படிங்க : ஆதியோகி சிலைக்கான அனுமதி: ஆதாரங்களை வெளியிட்டு அதிரடி காட்டிய ஈஷா!
அதுவரை நாட்டுபுற இசை, கர்நாடக இசையிலேயே பயணித்த ரசிகர்களை மேற்கத்திய இசையில் பயணிக்க வைத்தார் ரஹ்மான். ரோஜா திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என உலகம் முழுவதும் இவரின் புகழ் பரவியிருக்கிறது.
இந்த நிலையில் சமீபகாலமாக இளையராஜாவை ரஹ்மானையும் ஒப்பிட்டு பல விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. இளையராஜா யாரையும் மதிப்பதில்லை என்றும் தன்னுடன் இருந்தவர்களை கூட அவர் சரியாக நடத்த மாட்டார் என்றும் பல வித விமர்சனங்கள் அவரை பற்றி வந்து கொண்டு தான் இருக்கின்றன.
இதையும் படிங்க : ரஜினி ரசிகர் மன்ற செயலாளராக இருந்த விஜயகாந்த்! கேப்டனுக்கு பின்னாடி இப்படி ஒரு வெறியனா?
அவருடன் வயதில் இளையவரான ரஹ்மான் ஒரு பக்குவம் கொண்ட மனிதராக காணப்படுகிறார் என்றும் இத்தனை சாதனைகளை படைத்தவரானாலும் ரஹ்மானிடம் கர்வம், திமிரு, அகங்காரம் என எதையும் இதுவரை பார்த்ததில்லை என்றும் தொடர்ந்து செய்திகளில் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த நிலையில் இளையராஜாவுடன் தொடர்ந்து 5 வருடம் உதவியாளராக இருந்தவர் இசையமைப்பாளர் பரணி.
அவரிடம் நிருபர் ‘5 வருடம் இளையராஜாவுடன் இருந்ததற்கு பதிலாக எம்.எஸ்.வியுடன் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்’ என கேட்டார். அதற்கு பரணி ‘என்னை எம்.எஸ்.வியிடம் அழைத்துக் கொண்டு போனவரே நடிகர் விவேக்தான். என்னை பார்த்ததும் எம்.எஸ்.வி உன் பாடல்களை நான் கேட்டிருக்கிறேன், நன்றாக பணியாற்றியிருக்கிறாய் என கட்டியணைத்துக் கொண்டார்’ என்று பரணி கூறினார்.
இதையும் படிங்க : சஞ்சயால இயக்குனராலாம் நிலைக்க முடியாது… இதுதான் அவருக்கு செட் ஆகும்…
உடனே அந்த நிரூபர் ‘ஆனால் இது இளையராஜாவிடம் இல்லையே. 5 வருடம் கூடவே இருந்தவரை ஒருமுறையாவது பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் வந்ததே இல்லையே’ என்று கூற அதற்கு பரணி ஆமாம் ஆமாம் என்று பதிலளித்தார். மேலும் ரஹ்மானிடமும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பரணி தன்னை பற்றி சொல்லியிருக்கிறார்.
ரஹ்மானும் சரி, தொடர்பிலேயே இருங்கள், நான் கூப்பிடுகிறேன் என்று சொன்னாராம். எம்.எஸ்.விக்கு பிறகு அந்த மென்மையாக பேசும் குணத்தை ரஹ்மானிடம் தான் பார்த்தேன் என்று பரணி கூறினார்.
Sivakarthikeyan: இசை…
ஜெயம் ரவி…
நடிகை கஸ்தூரி…
சினிமா செலிப்ரட்டிகளுக்கு…
தற்போது விஜய்…