விஜய்க்கு எதிரா பாட்டெழுதி எல்லாம் போச்சு! அஜித்தால் வாழ்க்கையை தொலைத்த பிரபலம்..

ajith
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட தனது 30 வருட திரை பயணத்தை வெற்றிகரமாக முடித்திருக்கிறார் இசை அமைப்பாளர் பரத்வாஜ். காதல் மன்னன் என்ற திரைப்படத்தின் மூலம் தனது அறிமுகத்தை பதிவு செய்தார் பரத்வாஜ். அதைத்தொடர்ந்து சரண் எடுத்த பெரும்பாலான படங்களில் இவர் தான் இசையமைத்துக் கொடுத்திருக்கிறார்.
அந்த அளவுக்கு இயக்குனர் சரணுக்கும் பரத்வாஜ்ஜுக்கும் இடையே நல்ல ஒரு நட்புறவு இருந்து வந்தது. மேலும் காதல் மன்னன், அசல், அமர்க்களம் ,திருப்பதி போன்ற அஜித்தின் பல படங்களுக்கும் இவரே இசையமைத்திருக்கிறார்.
இதையும் படிங்க : மாப்பிள்ளை இவர்தான்! ஆனால்? ‘படையப்பா’ காமெடியில் தாண்டவமாடும் விஜய் – ரஜினி மோதல்
ஆனால் 30 வருட திரை பயணத்தை கடந்த பரத்வாஜ் ஒருமுறை கூட விஜயுடன் அவர் பணியாற்றியதே இல்லையாம். அதற்கான காரணம் என்ன என்பதை அவரே கூறி இருக்கிறார். அஜித்தின் படங்களில் பணியாற்றும் போது அஜித்திற்காக அவர் பாடிய பாடல்கள் பெரும்பாலும் விஜயை தாக்குவதாகவே இருக்கும்.

ajith1
உதாரணமாக தல போல வருமா மற்றும் உனக்கென்ன உனக்கென்ன போன்ற இந்த பாடல்கள் விஜய்க்கு எதிராகவே பாடப்பட்ட பாடல்கள் போல இருக்கும். இது பிளான் பண்ணி எடுக்கப்பட்டதா என அவரிடம் கேட்டதற்கு ஆமாம் இது எல்லாமே பிளான் தான் எனக் கூறியிருந்தார்.
இதன் காரணமாகவோ என்னவோ விஜய் படங்களில் பணியாற்றுவதற்கு எனக்கு வாய்ப்பே வரவில்லை என்றும் பரத்வாஜ் கூறினார்.
இதையும் படிங்க : பல வருட காதலா?.. அப்போ பிரியா பவானி சங்கர், லாஸ்லியாலாம் டைம் பாஸா?.. விபூதி அடிக்க பார்த்த கவின்!..