பரத்வாஜ் பாட்டைக் கேட்டு சாவிலிருந்து மீண்ட குடும்பம்… இது எப்போ நடந்தது?

bharathwaj
இசை அமைப்பாளர் பரத்வாஜ் ஆரம்பத்தில் தெலுங்கு படங்களில் தான் இசை அமைத்துள்ளார். அதன்பிறகு அங்குள்ள வரவேற்பைத் தொடர்ந்து தெலுங்கு பட தயாரிப்பாளர் ஒருவர் தமிழில் படம் எடுத்தார். அதுதான் அஜீத் நடித்த காதல் மன்னன். அந்தப் படத்தின் மூலமாகத் தான் பரத்வாஜ் தமிழ்த்திரை உலகில் காலடி எடுத்து வைத்துள்ளார்.
அந்தப் படத்தின் இயக்குனர் சரண். சினிமாவில் இசையும், இயக்குனரும் முக்கியமானவர்கள். அவருக்கும் எனக்கும் நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனது. அவரோடு இணைந்து 12 படங்கள் பண்ணி இருக்கேன். அவருடன் இணைந்து காதல் மன்னன், அமர்க்களம், பார்த்தேன் ரசித்தேன், ஜெமினி, வசூல் ராஜா எம்பிபிஎஸ், ஜேஜே, அட்டகாசம், வட்டாரம், அசல், இதயத்திருடன், ஆயிரத்தில் இருவர் உள்பட பல படங்களைச் சொல்லலாம். இசையைத் தான் முதல்ல நான் விரும்புவேன்.
இந்தப் பணமோ, புகழோ எனக்கு தகுதி இருந்ததனாலயோ, இல்லாததுனாலேயோ வரும். எல்லாமே அது அது தனியா வரணும்கற நம்பிக்கையில இருக்கேன். என்னை யாருமே வற்புறுத்த முடியாது. கட்டாயப்படுத்த முடியாது. நான் இவ்ளோ ஹிட் படங்கள் கொடுத்துருக்கேன். அதனால எனக்கு இதுவே பெரிய விஷயம். மக்களிடையே நல்ல பெயர்.
காதல்.காம் படத்தில் உள்ள அத்தைப்பொண்ணு பாட்டு போர்ச்சுகல் பிலிம்ல இருக்கு. சௌத் ஆப்ரிகாவுல டர்பனில் பிரியசகி படத்துல உள்ள பாடல்கள் ஃபேமஸ். இப்படி நிறைய விஷயங்கள் இருக்கு. அதனால இந்தத் திறமையே மிகப்பெரிய அங்கீகாரம். மற்றபடி வாழ்க்கையில நடக்குறது இன்சிடன்ட்தான். மற்றபடி நிறைவாகவும், சந்தோஷமாகவும் இருக்கேன் என்கிறார் பரத்வாஜ்.
நானும் சரணும் பாம்பேல இருந்தோம். அப்போ அஜீத்துக்கு 'தல'ன்னு ஒரு பேரு வச்சிருக்காங்க. அதை வச்சி ஒரு பாடல் வச்சிரலாமா… ன்னு பேசினோம். அப்போ தான் தல போல வருமான்னு பாடல் உருவானது. தல போல வருமான்னு சொன்னா கெத்தா இருக்கும்னு அதை வச்சோம்.
ஒன்பது ரூபாய் நோட்டு படத்துல மார்கழியில் குளிச்சிப் பாரு பாடல் ரொம்ப பிரபலம். அந்த நேரத்துல 2009ல ஒரு ஊர்ல ஒரு குடும்பமே தொழில் நஷ்டம்னு தற்கொலை பண்ணப் போனாங்களாம். அப்போ டிவில அந்;தப் பாட்டு ஓடியதாம். அதைக் கேட்டு அந்த தற்கொலை முடிவையே மாற்றிடுச்சு என்கிறார் இசை அமைப்பாளர் பரத்வாஜ்.