மனைவியை பிரியும் ஜி.வி.பிரகாஷ்!. விரைவில் விவாகரத்து?.. அட போங்கப்பா!.

Published on: May 12, 2024
---Advertisement---

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகன்தான் ஜி.வி.பிரகாஷ். ஷங்கர் இயக்கிய ஜென்டில்மேன் படத்தில் ‘சிக்கு புக்கு சிக்கு ரயிலே’ பாடலில் துவக்கத்தில் வரும் மழலை குரல் இவருடையதுதான். வசந்தபாலன் வெயில் திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக மாறினார்.

முதல் படத்திலேயே அசத்தலான இசையை கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். குறிப்பாக மனதை மயக்கம் மெலடி பாடல்களை கொடுத்தவர் இவர். சின்ன வயதிலேயே பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடித்த குசேலன் படத்தில் இசையமைத்தார். விஜயின் ‘தலைவா’ படத்தில் இவர்தான் இசை.

gv prakash

அஜித் நடித்த கிரீடம் படத்தில் ஒரு அற்புதமான மெலடியை கொடுத்தார். தொடர்ந்து தனுஷ், விக்ரம் என பலரின் படங்களிலும் இசையமைத்தார். அதில், ஆடுகளம் படத்தில் மனதை மயக்கும் மெலடியை கொடுத்திருந்தார். ஒருகட்டத்தில் சினிமாவில் நடிக்கும் ஆசை வர நடிகராக மாறினார்.

குறைந்த காலகட்டத்தில் மிகவும் அதிகமான படங்களில் நடித்த நடிகராக மாறினார். இதில், திரிஷா இல்லனா நயன்தாரா, டார்லிங் படங்கள் அவருக்கு வெற்றிப்படங்களாக அமைந்தது. கடந்த சில மாதங்களாக ஜிவி பிரகாஷ் நடிப்பில் வாரம் ஒரு படம் வெளியாகி கொண்டிருக்கிறது. ரெபல், கள்வன், டியர் என அவரின் வெளியாகும் படங்கள் எதுவும் ஓடவில்லை.

gv prakash

ஜிவி.பிரகஷ் பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில், இருவரும் கருத்து வேறுபாட்டால் கடந்த சில மாதங்களாக பிரிந்திருப்பதாகவும், விரைவில் விவாகரத்துக்கு விண்ணப்பிக்க இருப்பதாகவும் செய்தி கசிந்திருக்கிறது.

சினிமாவில் காதலித்து திருமணம் செய்து கொள்ளும் பிரபலங்கள் பலரும் தொடர்ந்து விவாகரத்து செய்து கொள்வது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இந்த வரிசையில் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதிக்கு பின் ஜிவி பிரகாஷ் – சைந்தவி ஜோடியும் இணைந்திருக்கிறது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.