Simbu- Desingh periyasamy: தமிழ் சினிமாவில் ஒரு கம்பேக் அப்புறம் தன்னுடைய அசாத்திய திறமையை வெளிப்படுத்தி வருகிறார் நடிகர் சிம்பு. மாநாடு படம் எந்தளவு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது என அனைவருக்கும் தெரிந்திருக்கும். அந்தப் படம் சிம்புவுக்கு மட்டுமில்லாமல் அதை இயக்கிய வெங்கட் பிரபு மற்றும் வில்லனாக நடித்த எஸ்.ஜே.சூர்யா இருவருக்குமே ஒரு பெரிய ஹைப்பை ஏற்படுத்திய படமாக அமைந்தது.
மாநாடு படத்திற்கு பிறகு ஒரு பெரிய கூட்டணியில் இரண்டு படங்களில் நடித்து ரசிகர்களின் பேராதரவை பெற்றார் சிம்பு. வெந்து தணிந்தது காடு படத்தில் யாருமே எதிர்பார்க்காத நடிப்பை சிம்பு வெளிப்படுத்தினார்.
இதையும் படிங்க: ஏலேய்! ஒன்னு இருந்தாலே முடியாது… இதுல நாலு சேந்தா!! தரையில நடந்தத திரையில காட்ட போறாங்களாமே!
அதே போல் பத்து தல படத்தில் ஒரு பெரிய டானாக நடித்து பிரமிக்க வைத்தார். இந்தப் படங்களுக்கு பிறகு ராஜ்கமல் நிறுவனத்துடன் இணைந்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கிறார்.
அந்தப் படம் அறிவித்ததில் இருந்தே ஐசரி கணேஷுக்கும் சிம்புவுக்கு இடையே சில பல கருத்து வேறுபாடுகள் எழுந்து இப்பொழுது ஒரு தீர்வை எட்டியிருக்கின்றன. இதில் மற்றுமொரு பிரச்சினையாக சிம்பு தேசிங்கு பெரியசாமி கூட்டணியில் உருவாக இருக்கும் படத்திற்கு அனிருத்தான் இசையமைக்க வேண்டும் என நிறுவனம் விரும்பியது.
இதையும் படிங்க: அடுத்த பாக்யலட்சுமி , கண்ணம்மாவை ஒரு வழியா தேடிட்டாங்கப்பா! இவர்தான் ‘கதாநாயகி’ நிகழ்ச்சியின் வின்னரா?
ஆனால் அனிருத்தின் கால்ஷீட் காரணமாக இந்தப் படத்திற்கு இசையமைக்க முடியாது என அனிருத் மறுத்ததாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் சிம்புவின் படத்திற்கு பேன் இந்திய அளவில் இசையமைப்பாளரை இறக்க திட்டமிட்டிருக்கிறார்களாம்.
கே.ஜி.எஃப்ஃ படத்தின் இசையமைப்பாளரான ரவி பஸ்ரூரைத்தான் இந்தப் படத்திற்கு ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கே.ஜி..எஃப்ஃபில் எப்படி ஒரு பிஜிஎம்மை தெறிக்க விட்டிருந்தார் என அனைவருக்குமே தெரிந்திருக்கும். இப்போது சிம்புவின் படத்திற்கும் ஒரு ஹைப்பை எகிற வைப்பார் என்றே தெரிகிறது.
இதையும் படிங்க: பாக்கியலட்சுமி: பூஜ்ஜியமாகும் கோபி… அப்பா ரூட்டில் ஜொல்லு பார்ட்டியான செழியன்…
Rj balaji…
விமர்சனம் செய்வது…
விஜய் அக்டோபர்…
கார்த்திக் சுப்புராஜ்…
Surya: நடிகர்…