ரஜினி படத்துக்கு மியூசிக் போட வந்த வாய்ப்பு!.. எல்லாமே போச்சி!.. இசையமைப்பாளர் ஃபீலிங்!..

சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைப்பது எவ்வளவு கஷ்டமோ அதேபோல்தான் இசையமைக்க கிடைக்க வாய்ப்பும். ஒரு படத்தில் இசையமைக்க வாய்ப்பு கிடைக்க வேண்டும். அதற்கு இயக்குனரும், தயாரிப்பாளரும் மனது வைக்க வேண்டும். இடையில் அவரை மாற்றிவிட்டு வேறு இசையமைப்பாளரை போடாமல் இருக்க வேண்டும்.

அப்படி வாய்ப்பு கிடைத்து இசையமைத்த பின் அந்த பாடல்கள் ஹிட் அடிக்க வேண்டும். அப்போதுதான், ஒரு இசையமைப்பாளருக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும். அன்னக்கிளி படத்தில் இடம் பெற்ற பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் பாடியதால்தான் இளையராஜாவுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தது.

இதையும் படிங்க: ஒருத்தருக்கும் ஒத்த பைசா கொடுக்காத வடிவேலு வெங்கல் ராவுக்கு கொடுக்க காரணம்!.. சீக்ரெட் சொன்ன நடிகர்..

இது எல்லா இசையமைப்பாளர்களுக்கும் பொருந்தும். தமிழ் திரையுலகில் பல புதிய இசையமைப்பாளர்கள் வந்து சில படங்களுக்கு மட்டும் இசையமைத்துவிட்டு காணாமல் போய்விடுவார்கள். அதில் சிற்பியும் ஒருவர். மனோபாலா இயக்கிய செண்பக தோட்டம் என்கிற படம் மூலம் இவர் இசையமைக்க துவங்கினார்.

கிட்டத்தட்ட 50 படங்களுக்கு இவர் இசையமைத்திருக்கிறார். அதில் நான் பேச நினைப்பதெல்லாம், கோகுலம், நாட்டாமை, உள்ளத்தை அள்ளித்தா, சுந்தர புருஷன், மேட்டுக்குடி ஆகிய படங்கள் முக்கியமானவை. இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

sirpy

சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய சிற்பி ‘முதன் முதலில் மனோபாலாவிடம் சென்றுதான் வாய்ப்பு கேட்டேன். அப்போது எனக்கு வயது 24. அப்போது மனோபாலா ஊர்க்காவலன் படத்தை இயக்கும் வேலையில் இருந்தார். என்னை அப்படத்தின் தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பனிடம் அழைத்து சென்று அறிமுகம் செய்தார். சில டியூன்களை பாடி காட்டினேன். அவருக்கும் பிடித்துவிட்டது. எனவே, ‘நீயே இந்த படத்துக்கு மியூசிக் பண்ணு’ என சொல்லிவிட்டார்.

அடுத்த நாள் அங்கே போய் நான் பார்த்தால் சங்கர் கணேஷ் உட்கார்ந்திருந்தார். என்னை அழைத்து ‘நீ சின்ன பையனாக இருக்கிறாய். படத்திற்கு பின்னனி இசையெல்லாம் அமைக்க வேண்டும். அதோடு, இது ரஜினி படம். தப்பாக போய்விடக்கூடாது. நீ தொடர்பில் இரு. கண்டிப்பாக எதிர்காலத்தில் உனக்கு வாய்ப்பு கொடுக்கிறோம்’ என சொன்னார்கள். அதன்பின் கோகுலம், நான் பேச நினைப்பதெல்லாம் ஆகிய படங்களில் பாடல்கள் ஹிட் அடித்ததால் எனக்கு வாய்ப்புகள் வந்தது’ என சிற்பி சொல்லி இருந்தார்.

 

Related Articles

Next Story