ரஜினியா? கமலா?.. யாருக்கு திமிர் அதிகம்னு நேர்ல பார்த்திருக்கேன் – மீசை ராஜேந்திரன்…

Published on: April 26, 2023
---Advertisement---

கமல் ரஜினி இரண்டு நடிகர்களுமே தமிழ் சினிமாவில் மிகப்பெரும் உச்சத்தை தொட்ட பெரிய நடிகர்கள் என கூறலாம். நடிகர்கள் சினிமாவிற்கு வருகிற புதிதில் அவர்கள் மிகவும் நல்ல நடத்தையுடன் நல்லவிதமாக நடந்து கொள்வார்கள்.

ஆனால் அவர்கள் பெரும் உச்சத்தை தொட்ட பிறகு அதே மாதிரியான மனநிலையில் இருப்பார்களா? என்பது சந்தேகம்தான் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை சில நடிகர்கள் பெரிய உச்சத்தை தொட்ட பிறகும் கூட அடக்கமாக நடந்து கொள்ளும் நடிகர்களாக இருந்துள்ளனர். நடிகர் விஜயகாந்த் மாதிரியான சில நடிகர்கள் அதில் அடக்கம்.

ஆனால் நடிகர் ரஜினி,கமல் இருவரும் அப்படியான நடிகர்களாக இருந்தார்களா? என்பது ஒரு கேள்விக்குறிய விஷயமாகவே இருந்து வருகிறது. ஏனெனில் கமல் ரஜினி இருவரை பற்றியுமே நேர்மறையான மற்றும் எதிர்மறையான விமர்சனங்கள் திரைத்துறையில் உள்ளன.

ரெண்டு பேர்ல யாருக்கு திமிர் அதிகம்:

கமல் ரஜினி இருவரது திரைப்படங்களிலும் பணிப்புரிந்தவர் நடிகர் மீசை ராஜேந்திரன். இவர் பல வருடங்களாக சினிமா துறையில் பணிபுரிந்து வருகிறார் இவர் ஒரு பேட்டியில் இருவரை பற்றியும் கூறும்போது ரஜினியை விட கமல் கொஞ்சம் திமிர் அதிகமாகக் கொண்டவர் எனக் கூறுகிறார்.

பொதுவாகவே பிரபலமாகி விட்டாலே நமக்கு ஒரு திமிர் இருக்கும் அதில் ரஜினிக்கு அப்படியான விஷயங்கள் குறைவாகவே இருப்பதை பார்த்துள்ளேன். ஏனெனில் ரஜினி சின்ன நடிகர்களுடன் கூட சகஜமாக பழகுவார் ஆனால் கமல் அவருக்கான மரியாதையை அனைத்து நடிகர்களிடமும் எதிர்பார்ப்பார்.

வசூல்ராஜா திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்த பொழுது அதில் ஒரு நடிகர் மட்டும் கமலுக்கு வணக்கம் சொல்லாமல் அமர்ந்திருந்தார். அதனால் கோபமான கமல் அவர் நடிக்கும் காட்சியிலேயே ஆளை மாற்றி விட்டார்.

ஆனால் ரஜினி அப்படியான மரியாதைகளை எதிர்பார்ப்பது கிடையாது. அவர் அனைவரிடமும் சாதாரணமாக பழகுபவர் அந்த விஷயம் எனக்கே வியப்பை கொடுக்கக்கூடிய விஷயமாக இருந்தது என மீசை ராஜேந்திரன் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

Rajkumar

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.